Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த பும்ரா.. நெகிழ்ச்சி பதிவு.. காத்திருக்கும் சவால்கள்?

மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 10வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். 2016 ஜனவரி 23 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான பும்ரா, இந்நாளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மனதைத் தொடும் பதிவுடன் நினைவுகூர்ந்தார்.

அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் சில மறக்க முடியாத தருணங்களைச் சிறப்பிக்கும் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். ஸ்டீவ் ஸ்மித்தின் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியது முதல், 2024 ஆடவருக்கான டி20 உலகக் கோப்பையை இந்தியாவுடன் வென்று தொடரின் சிறந்த வீரர் விருதை பெற்றது வரை அந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.

இந்தக் வீடியோவில் பார்படாஸ் மற்றும் பின்னர் மும்பையில் இந்திய அணி தாயகம் திரும்பியபோது நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட பேரணி காட்சிகளும் அடங்கும். விமர்சனங்கள், கருத்துகளுக்கு எதிராக செல்ல தனக்கு உதவிய கடவுளுக்கும் தனது குடும்பத்தினருக்கும் அவர் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.

தனது சமூக வலைத்தளப் பதிவில் பும்ரா "இந்த உலகில் வேறு எதுவும் அளிக்காத உயிர்ப்பு உணர்வை அளித்த விளையாட்டின் மீது காதல் கொண்ட அந்தக் குழந்தையின் கனவை வாழும் பத்தாண்டுகள் இவை. ஊகங்கள், கருத்துகள், புரிதல்களுக்கு எதிராகச் செல்லும் பயணம், குடும்பத்தினர் மற்றும் கடவுளின் அன்பும் ஆதரவும் தொடர்கிறது. கடவுளுக்கு நன்றி.

தனது சிறப்பான சர்வதேச வாழ்க்கையில், பும்ரா இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசி 234 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 19.79 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 42.87 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 89 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 23.55 சராசரியுடன் 149 விக்கெட்டுகளையும், 83 டி20 சர்வதேசப் போட்டிகளில் 18.17 சராசரியுடன் 103 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், மூன்று வடிவங்களிலும் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மிகச் சில பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் அவர் திகழ்கிறார்.

அவர் பலமுறை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளார். ' ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார். தற்போது பும்ராவுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே டி20 உலககோப்பையை வெல்ல முக்கிய பங்காற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல், பும்ரா அடிக்கடி காயம் ஏற்படுவதால், அவரால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவதில்லை. இந்த சிக்கலை எல்லாம் தாண்டி அவர் பல ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்பாக உள்ளது.

Story first published: Friday, January 23, 2026, 12:44 [IST]
Other articles published on Jan 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+