Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2023 ஆசியக்கோப்பை பாகிஸ்தானில் இல்லை.. ஜெய் ஷாவின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?

மும்பை: ஆசிய கோப்பை தொடர் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின் மீது தான் கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் உள்ளது.

குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் அக்டோபர் 23ம் தேதி மோதும் போட்டிக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஜெய் ஷாவின் அறிவிப்பு

ஜெய் ஷாவின் அறிவிப்பு

இப்படிப்பட்ட சூழலில் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஜெய் ஷா அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ஆசிய நாடுகளுக்கு இடையே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கோப்பை தொடர் அடுத்தாண்டும் நடைபெறவுள்ளது. 50 ஓவர் கிரிக்கெட் தொடராக இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவிருந்தது.

 இந்திய அணி பயணம்

இந்திய அணி பயணம்

அரசியல் ரீதியான பிரச்சினைகள் காரணமாக இருதரப்பு தொடர்களில் இதுவரை மோதிக்கொள்ளாத இந்திய அணியும், அடுத்தாண்டு பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதாக பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் வந்தது. இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்துள்ள ரசிகர்களின் ஏக்கம் தீரவுள்ளதாக மகிழ்ச்சியில் இருந்தன.

பயணம் ரத்தானது

பயணம் ரத்தானது

இந்நிலையில் இந்தியா பயணிக்கவில்லை என ஜெய் ஷா கூறியுள்ளார். ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான ஜெய் ஷா, அடுத்தாண்டு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறாது என்றும், பொதுவான ஏதோ ஒரு நாட்டில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் வாரியம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பாதுகாப்பு மற்றும அரசின் அனுமதி இல்லாதது போன்றவை காரணமாக கூறப்படுகிறது.

கடைசி சுற்றுப்பயணம்

கடைசி சுற்றுப்பயணம்

இந்திய அணி கடைசியாக 2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் செயல்பட்டிருந்தார். அதன்பின்னர் இரு அணிகளும் தனிப்பட்ட தொடர்களில் ஈடுபட்ட வந்த நிலையில் அதுவும் 2013ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. இவை சரியாகிவிட வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம், கனவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 18, 2022, 17:14 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+