Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஷா-க்கு தகுதி இருப்பதால் தான், பிசிசிஐ செயலாளராக இருக்கிறார்.. மத்திய அமைச்சர் அனுராக் கருத்து

மும்பை : 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள ஏழு கட்ட தேர்தலில் நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்து இருக்கிறது.இன்னும் மூன்று தேர்தல் கட்டங்கள் நடைபெற உள்ளன.

ஜூன் ஒன்றாம் தேதி மொத்த தேர்தலும் முடிவடையும் நிலையில் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியோர் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.

jay shah became BCCI secretary because of his merit says BJP minister anurag thakur

இன்று தேர்தலில் கிரிக்கெட்டும் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக வகிக்கிறது. ஆம் ஆளும் கட்சியான பாஜக காங்கிரசை வாரிசு அரசியலை செய்வதாக குற்றச்சாட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் காங்கிரஸ் தலைவர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா எவ்வாறு பிசிசிஐ செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கூட ஜெய்ஷாவை கடுமையாக சாடி வந்தார். இந்த நிலையில் ஜெய்ஷா குறித்து கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அனுராக் தாக்கூர், ஜெயிஷாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசி அவர் பிரபலமான ஒருவரின் மகனாக பிறந்தது ஜெய்ஷாவின் குற்றம் அல்ல. ஜெய்ஷா, பிசிசிஐயின் செயலாளர் ஆக இருக்கிறார் என்றால் அவருக்கு அனைத்து தகுதியுமே இருக்கிறது. அவருடைய சிறந்த செயல்பாடு காரணமாகத்தான் ஜெய்ஷா செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

ஜெய்ஷா பதவியேற்ற பிறகு தன்னுடைய இளம் வயதில் கிரிக்கெட்டுக்காக பல்வேறு நல்ல விஷயங்களை செய்திருப்பதாகவும் பாராட்டியுள்ளார். அனுராக் தாக்கூரை என்ற கருத்து தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதுவரை ஒரு கிரிக்கெட் போட்டியில் கூட ஜெய்ஷா விளையாடாத நிலையில் அவர் எப்படி தகுதியான நபர் என்று அனுராக் தாக்கூர் சொல்வதாக ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, May 14, 2024, 18:08 [IST]
Other articles published on May 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+