
பிசிசிஐ திட்டம்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரானது 84 போட்டிகளுடன் நடைபெற்றது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் 94 போட்டிகளாக அது அதிகரிக்கப்படவுள்ளது. இதே போல ஐபிஎல் தொடரின் காலத்தை இரண்டரை மாதங்களாக அதிகரிக்கப்படும் என ஜெய் ஷா அறிவித்திருந்தார்.

அதிகரிக்கும் எதிர்ப்பு
பிசிசிஐ-ன் இந்த முடிவு, கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் சில கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதாவது ஐபிஎல் தொடரில் இரண்டரை மாதங்களாக சர்வதேச வீரர்கள் இருந்தால், மற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படும். அதனை எப்படி ஏற்பது என்ற கேள்வியை முன்வைத்து வந்தனர்.

ஜெய் ஷாவின் பதில்
இந்நிலையில் ஜெய்ஷா அதற்கு பதிலளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பலமாக இருக்கும் வரை இந்திய கிரிக்கெட்டும் சிறப்பாகவே இருக்கும். சர்வதேச கிரிக்கெட் மீது இந்தியாவும் அதிக ஈர்ப்புடன் தான் உள்ளது. நாங்கள் வெறும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளுடன் மட்டும் விளையாடவில்லை. சிறிய நாடுகளுடனும் விளையாடி சர்வதேச தரத்தை மேம்படுத்த விரும்புகிறோம்.

2 அணிகள் முறை
எதிர்காலத்தில் இரண்டு அணிகள் என்ற முறைதான் இருக்கும். அதாவது இந்திய டெஸ்ட் அணி ஒரு நாட்டில் விளையாடி வரும். அதே சமயத்தில் மற்றொரு இந்திய அணி டி20 அல்லது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடும். தற்போதே இந்திய அணி அயர்லாந்து, இங்கிலாந்து என அந்த முறையை தொடங்கிவிட்டது.

லக்ஷ்மணிடம் ஆலோசனை
தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மணிடம் ஆலோசனை நடத்திவிட்டோம். அதில் 50% வீரர்கள் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் ஒரு அணியும், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒரு அணியும் பங்கேற்றிருக்கும் என்பதை உறுதி செய்யவுள்ளோம். இதுதான் எதிர்காலம் என ஜெய்ஷா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications