Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலியை வைத்து காய் நகர்த்தும் ஜெய் ஷா ! விராட் கோலிக்கும், ஜெய் ஷாவிற்கும் அப்படி என்ன பிரச்சினை?

மும்பை: மாப்பிள்ளை இவர் தான்.. ஆனால் அவர் போட்டு இருக்கிற டிரஸ் என்னது என்ற படையப்பா காமெடி உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்..

Recommended Video

இந்திய அணியில் Sachin-க்கு புதிய பொறுப்பு - Sourav Ganguly | Oneindia Tamil

அது போல தான், பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தான், ஆனால் பவர் அனைத்தும் எனக்கு தான் என்று செயல்பட்டு வருகிறார் பிசி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா.

விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே பிரச்சினை, விராட் கோலிக்கும் கங்குலிக்கும் தான் பிரச்சினை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.. உண்மையே வேறு என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்..

பிரச்சினையே வேறு?

பிரச்சினையே வேறு?

பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷாவிற்கும், விராட் கோலிக்கும் இடையே தான் உண்மையில் பிரச்சினையே ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமும் விராட் கோலி அளித்த பேட்டி ஒன்று தான். அதிலிருந்து தான் விராட் கோலி மீது ஜெய் ஷா அதிருப்தி அடைந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன பிரச்சினை?

என்ன பிரச்சினை?

கடந்த அக்டோபர், நவம்பர் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் தான் இந்தப் பிரச்சினையே தொடங்கியது. இதில் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது. இதில் முகமது ஷமி மீது சிலர் கடுமையாக விமர்சனத்தை வெளிப்படுத்தினர். ஷமி பாகிஸ்தானுக்காக விளையாடியதாக குற்றஞ்சாட்டினர்.

கோலியின் ஆதரவு

கோலியின் ஆதரவு

இந்த விமர்சனத்தால் அதிருப்தி அடைந்த விராட் கோலி, முகமது ஷமிக்கு முழு ஆதரவு அளித்தார். மேலும் முகமது ஷமி மீது அவதூறு செய்தவர்களை விராட் கோலி கடுமையாக சாடினார்.. விராட் கோலியின் இந்த பேச்சுக்கு ஒரு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, விராட் கோலியையும் சேர்த்து கேலி செய்தனர்.

அதிருப்தியில் ஜெய்ஷா

அதிருப்தியில் ஜெய்ஷா

விராட் கோலியின் இந்த பேச்சு ஜெய்ஷாவை அதிருப்திக்குள்ளாக்கியது. முகமது ஷமிக்கு ஆதரவாக பி.சி.சி.ஐ.யே மௌனம் காத்த நிலையில், விராட் கோலி மட்டும் ஆதரவாக பேசியது தான் இந்த பிரச்சினைக்கு காரணம், அப்போதிலிருந்தே விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்க கங்குலியை வைத்து ஜெய்ஷா காய் நகர்த்தி வருகிறார். இதில் ரசிகர்களின் கோபம் கங்குலி மீது திரும்பினால், கங்குலியை ராஜினாமா செய்ய வைத்து, அந்த பதவிக்கு ஜெய்ஷா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 17, 2021, 17:41 [IST]
Other articles published on Dec 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+