Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Jay shah - ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? இத்தனை கோடிக்கு அதிபதியா

மும்பை : ஐசிசி தலைவர் பதவியில் ஜெய்ஷா பொறுப்பேற்று இருக்கும் பிசிசிஐயின் செயலாளராக இருந்த ஜெய்ஷா தற்போது கிரிக்கெட்டின் தலைமை பதவிக்கு வந்திருக்கிறார். இதன் மூலம் ஐசிசி தலைவர் பதவிக்கு வந்திருக்கும் ஐந்தாவது இந்தியர் என்ற பெருமை ஜெய்ஷாவுக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் ஜெய்ஷா யார் அவருடைய சொத்து மதிப்பு என்ன என்பதை தற்போது பார்க்கலாம். பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன்தான் ஜெய்ஷா ஆவார். தனது தந்தை நாட்டிலே மிகவும் அதிகாரம் படைத்த நபராக திகழ்கிறார்.

jay shah icc

இதனால் ஜெய்ஷாவுக்கு பதவிகள் தேடி வந்தது. தன்னுடைய தந்தையின் சாம்ராஜியத்தை கட்டி காக்க வேண்டும் என்றால் அதற்கு தன்னுடைய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு ஜெய்ஷா அதற்கான பணிகளை தொடங்கினார். தந்தை போல் இல்லாமல் ஜெய்ஷா பொறியியல் பட்டதாரி ஆக உருவானார். அதன் பின்பு தன்னுடைய கல்லூரியில் தோழியாக இருந்த ரிஷா பட்டேல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் ஜெய்ஷா,இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையானார்.

எனினும் தந்தை பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் ஜெய்ஷா படிப்படியாக தான் மேலே வந்தார். முதன்முதலாக ஜெய்ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக தன்னுடைய பணியை கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கினார். தன்னுடைய தந்தை அமித்ஷா தான் அப்போதைய தலைவராக இருந்தார். இந்த சூழலில் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளராக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெய்ஷா பதிவு உயர்வு பெற்றார்.

ஜெய்ஷாவின் சீரிய முயற்சியால் தான் அகமதாபாத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு பிசிசிஐயின் பொருளாதார குழுவில் உறுப்பினராக சேர்ந்த ஜெயிஷா 2019 ஆம் ஆண்டு தான் பிசிசிஐயின் செயலாளராக பதவி வகித்தார். ஜெய்ஷா தன்னுடைய பதவி காலத்தில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஐந்து ஆண்டுகளுக்கு 48,390 கோடி ரூபாய் அளவுக்கு விற்று சாதனை படைத்தார்.

இதன் மூலம் உலக விளையாட்டு அரங்கில் இரண்டாவது மிக பணக்கார விளையாட்டு தொடராக ஐபிஎல் மாறியது. அது மட்டும் இல்லாமல் ஜெய்ஷா மகளிர் பிரிமியர் லீக் என்ற தொடரை தொடங்கி பெண்களுக்கான கிரிக்கெட்டுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். அது மட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சீர்திருத்தம், வீராங்கனைகளுக்கும் ஆண்களுக்கு நிகரான சம்பளம் போன்ற பல நடவடிக்கைகளை செய்தார்.

இதற்கிடையில் ஜெய்ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிங் தலைவராகவும் செயல்பட்டார். ஜெய்ஷா கிரிக்கெட்டை தாண்டி ஒரு தொழிலதிபராகவும் இருந்திருக்கிறார். குசம் பீன்ஸ்வர் என்ற நிறுவனத்தில் 60 சதவீதம் பங்குகளை ஜெய்ஷா நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு சுமார் 124 கோடி அளவுக்கு இருக்கும். ஜெயிஷாவுக்கு சொந்த வீடு, கார் என்ற பல சொத்துக்கள் இருக்கின்றது.

தந்தையைப் போல் அரசியல்வாதியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்ஷா விளையாட்டு துறையில் நிர்வாகியாக திகழ்கிறார். தமக்கு இந்த பதவி கிடைத்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயிஷா, ஐசிசி குழுவிடம் இணைந்து நமது கிரிக்கெட்டை இன்னும் உலக அளவில் பிரபலப்படுத்த கண்டிப்பாக முயற்சி செய்வேன். அனைத்து தரப்பினரும் அடங்கிய முன்னேற்றத்தை கொண்டு வர முயல்வேன் என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, August 28, 2024, 12:27 [IST]
Other articles published on Aug 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+