Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் வீரர்களுக்கே சம்பளம் தரும் ஜெய்ஷாவின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

மும்பை : தலைப்பைப் படித்தவுடன் ஜெயிஷாவா கிரிக்கெட் வீரருக்கு சம்பளம் தருகிறார். பிசிசிஐ தானே வழங்கப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஜெய்ஷா தான் பிசிசிஐ! பிசிசிஐ தான் ஜெய்ஷா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்றால் இன்னும் நீங்கள் கிரிக்கெட் தொடர்பான பல அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் வீரர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை முடிவு செய்து அறிவிப்பதும் பிசிசிஐ செயலாளர் தான்.

எனவே ஜெய்ஷா சம்பளம் தருகிறார் என்று சொல்வதும் தவறில்லை.
பிசிசிஐ கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெய்ஷா தற்போது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டையும் தன் கைக்குள் கொண்டு வந்து விட்டார். ஆம் ஜெய்ஷா தற்போது ஐசிசி யின் தலைவராக பதவி ஏற்றிருக்கிறார். ஏற்கனவே ஐசிசியும் பிசிசிஐயும் ஒன்று என தீவுக்கார நண்பர்கள் மற்றும் அண்டை நாட்டு பங்காளிகள் சமூக வலைத்தளத்தில் கதறுவது உண்டு.

jayshah cricket

ஆனால் தற்போது இவர்களின் கூற்று உண்மையாகிவிட்டது. இந்த நிலையில் பிசிசிஐயில் ஜெய்ஷா செயலாளராக இருந்தபோது அவருடைய சம்பளம் எவ்வளவு? தற்போது ஐசிசி தலைவராக பொறுப்பேற்றிருக்கும் பிறகு ஜெய்ஷாவின் சம்பளம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். பிசிசிஐ யின் செயலாளராக ஜெயிஷா இருந்தபோது அவருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை.

ஆம் பிசிசிஐயில் தலைவர், செயலாளர், துணைத் தலைவர் மற்றும் பொருளாளர் பதவி எல்லாம் பெயர் மதிப்பிற்காக உள்ள பதவிகள். இதில் சம்பளம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. என்னது சம்பளம் இல்லாமல் தான் இவ்வளவு நாள் ஜெயிஷா போன்றவர்கள் எல்லாம் வேலை பார்த்தார்களா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்! இருங்கள்! இனிமேல் தான் விஷயமே இருக்கின்றது.

ஜெய்ஷாவுக்கு சம்பளம் கிடையாது. ஆனால் Allowance என்ற முறையில் லட்சம் லட்சமாக கிடைக்கும். அதாவது ஜெய்ஷா பிசிசிஐ தொடர்பாக ஏதேனும் பணியை மேற்கொள்ள வெளிநாடு செல்கிறார் என்றால் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் ரூபாய் அவருக்கு allowance மட்டுமே கிடைக்கும். இதேபோன்று பிசிசிஐ தொடர்பாக ஏதேனும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் ஜெயிஷா பங்கேற்றால் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் அவருக்கு கிடைக்கும்.

இது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள எந்த நகரத்திற்கும் ஜெய்ஷா சென்றால் கூட அவருக்கு முப்பதாயிரம் ரூபாய் தினந்தோறும் கிடைக்கும். இதற்காக தினந்தோறும் அவர் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்பது கூட அல்ல. கிரிக்கெட் போட்டியை பார்க்க ஒரு நகரத்திற்கு செல்கிறார் என்றால் கூட அவருக்கு அலோவன்ஸ் கொடுக்கப்படும்.

இப்படி சம்பளமே இல்லாமல் அலோவன்ஸ் மூலமே லட்சம் ரூபாய்க்கு மேல் ஜெய்ஷா சம்பாதிக்கலாம். இதே போன்று தான் ஐசிசி பொறுப்பில் இருப்பவர்களுக்கும் சம்பளம் என்று தனியாக கிடையாது. ஆனால் அவர்களுக்கு அலொன்ஸ் என்ற முறையில் பல வசதிகள் செய்து கொடுக்கப்படும். பிசிசிஐயில் எவ்வளவு அலோவன்ஸ் கிடைக்கிறது என்ற தகவல் வெளிப்படையாக இருப்பது போல் ஐசிசி யில் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் பி சி சி ஐ யில் வழங்குவதை விட ஐசிசி யில் அதிக பணம் நிச்சயம் கிடைக்கும். இந்த நிலையில் எந்த நாட்டிற்கு எவ்வளவு பட்ஜெட் தருவது? எந்த நாட்டிற்கு எவ்வளவு கிரிக்கெட் தொடரை வழங்குவது? ஐசிசி யின் கிரிக்கெட் தொடர்களின் ஒப்பந்த உரிமத்தை அதிகரிப்பது போன்ற பல விஷயங்களில் ஜெயிஷா கவனம் செலுத்தப் போகிறார். ஜெய்ஷாவின் வருகையால் இந்திய கிரிக்கெட்டுக்கு பல நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஜெய்ஷாவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும். அவர் விரும்பினால் இரண்டாவது முறையாக மீண்டும் பதவியில் தொடர்ந்து மேலும் ஒரு மூன்று ஆண்டுகள் ஐசிசி நாற்காலியில் அமரலாம்.

Story first published: Wednesday, August 28, 2024, 23:47 [IST]
Other articles published on Aug 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+