Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சதம் அடித்தார் ஜெயந்த் யாதவ்.. 9வது நிலை வீரராக களம் இறங்கி சாதனை!

மும்பை:இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஜெயந்த் யாதவ் அபாரமான சதம் அஏடித்தார்.

வான்கடே ஸ்டேடியத்தில் இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

Jayant yadhav scores first century in test match!

அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3வது நாள் முடிவில் 52 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்து.

இந்திய அணியில் முரளி விஜய் சதம் அடித்தாலும் ஒரு பக்கம் இங்கிலாந்தின் பந்துவீச்சுக்க தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தன. இதையடுத்து ஜோடி சேர்ந்த முரளி விஜய் - விராட் கோஹ்லி கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டது.

இதைத்தொடர்ந்து 9வது நிலை வீரராக களமிறங்கிய ஜெயந்த் யாதவ் கோஹ்லிக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இதனால் இங்கிலாந்தின் பந்துவீச்சை பதம்பார்த்த கோஹ்லி தனது 15 சதத்தைக் கடந்தார். நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 451 ரன்களை குவித்திருந்தது. இந்நிலையில் இன்று இநதிய அணி 4வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஒரு பக்கம் இரட்டை சதம் விளாசி சாதனை படைக்க, அவருக்கு பக்க பலமாக நின்று ஆடிய ஜெயந்த் யாதவும் சதமடித்து சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ஜெயந்த் யாதவ், 9வது வீரராக களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 104 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த போது ரஷித் பவுலிங்கில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து வோக்ஸ் பந்துவீச்சில் ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து விராட் கோஹ்லியும் பெவிலியன் திரும்பினார்.

சற்றுமுன் வரை இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 615 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் 215 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிகளவாக 235 ரன்களும் முரளி விஜய் 136 ரன்களும் ஜெயந்த் யாதவ் 104 ரன்களும் எடுத்தனர்.

Story first published: Sunday, December 11, 2016, 13:15 [IST]
Other articles published on Dec 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+