இலங்கை நாடாளுமன்ற தேர்தல் களத்தில் ஜெயசூர்யா!

ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இம்முறை பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவை தேர்தலில் போட்டியிட வருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்ட ஜெயசூர்யா, மாத்தாளை மாவட்டத்தில் அவர் போட்டியிடுவார் என்றும், விருப்ப மனுவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் விரைவில் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெயசூர்யா கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். எனவே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கிரிக்கெட் வாரியத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.
இதுபற்றி ஜெயசூர்யாவிடம் நிருபர்கள் கேட்டபோது, 'தேர்தலில் போட்டியிட என்னை அழைத்துள்ளனர். கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாது' எனக் கூறிவிட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications