Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்பலாம் நடக்க கூட முடியல.. எப்படி இருந்த ஜெயசூரியா இப்படி ஆகிட்டார்!

கொழும்பு: விளையாட்டு உலகம் எப்போதுமே இப்படித்தான் மோசமாக இருக்கும். நன்றாக இருக்கும் வீரர்களை அடக்கி அப்படியே உட்காரவைத்து விடும்.

யுவராஜ் சிங் அணியில் முழு பார்மில் இருந்த போது கேன்சர் மூலம் பாதிக்கப்பட்டு முடங்கி போனார். அதேபோல் தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டெய்ன் பேட்ஸ்மேன்களை மிரட்டிக் கொண்டு இருக்கும் போதே சர்ஜரி என ஒரு வருடம் விளையாடாமல் போனார்.

இந்த நிலை இலங்கை வீரர் ஜெயசூரியாவிற்கும் ஏற்பட்டு இருக்கிறது. இவர் நடக்க கூட முடியாமல் தற்போது கஷ்டப்பட்டு வருகிறார்.

ஜெயசூரியா பிரச்சனை

ஜெயசூரியா பிரச்சனை

இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூரியா சச்சினுக்கு இணையாக பார்க்கப்பட்ட முக்கியமான வீரர் ஆவார். இலங்கை அணியின் வீரர்களை தேர்ந்தெடுக்கும் செலக்சன் கமிட்டியில் இவர் தலைவராக இருந்தார். ஆனால் இலங்கையின் தொடர் தோல்விகள் காரணமாக இவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

நடக்க முடியவில்லை

தற்போது ஜெயசூரியா நடக்க கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். இவரது காலில் ஏற்பட்டு இருக்கும் அடியின் காரணமாக இப்படி ஆகியிருக்கிறார். நடக்கும் குச்சிகளை வைத்துதான் தற்போது இவர் சமாளித்துக் கொண்டு இருக்கிறார்.

வேண்டுங்கள்

இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து இவர் ''நீங்கள் விரைவாக குணமடைய வேண்டும். உங்கள் நலனுக்காக எல்லோரும் பிராத்தனை செய்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். ரசிகர்கள் பலர் இப்படி டிவிட் செய்துள்ளனர்.

சிறப்பானவர்

இவர் ஜெயசூரியா குறித்து பேசும்போது "ஜெயசூரியா மிக முக்கியமான வீரர்களில் ஒருவர். 1996ல் இலங்கை அணிக்காக உலகக் கோப்பை போட்டியில் முக்கிய பங்குவகித்தார். அவரது காலில் இருக்கும் பிரச்சனை கடவுள் புண்ணியத்தில் சரியாக வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Sunday, January 7, 2018, 11:50 [IST]
Other articles published on Jan 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+