ஜெயவர்த்தனே சதத்தால் வெற்றி- கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி அளித்த பஞ்சாப்
கொல்கத்தா: மஹிளா ஜெயவர்த்தனே போட்ட அபார சதத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அசத்தலாக வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த பஞ்சாப் அணிக்கு நேற்று நல்ல நாளாக அமைந்த்து. கொல்கத்தாவை அதன் கோட்டையிலையே அபாரமாக ஆடி வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த்து பஞ்சாப்.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்த்து. கெய்ல் 88 ரன்களைக் குவித்தார். திவாரி 35 ரன்களும், கங்குலி 36 ரன்களும் குவித்தனர்.
பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு ஜெயவர்த்தனே அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். கடைசி வரை ஆட்டமே இழக்காத அவர் 110 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 59 பந்துகளில் இந்த சதத்தைப் போட்டார் ஜெயவர்த்தனே.
இந்த ஐபிஎல் தொடரில் போடப்பட்ட 4வது சதம் இது. 3 சிக்சர்களையும், 14 பவுண்டரிகளையும் விளாசி சதத்தைப் போட்டார் ஜெயவர்த்தனே.
கேப்டன் சங்க்க்காரா 38 ரன்களையும், யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 33 ரன்களையும் குவித்த அணிக்கு உறுதுணையாக இருந்ததனர்.
18.2 ஓவர்களிலேய 2 விக்கெட்களை மட்டும் இழந்து பஞ்சாப் 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது பஞ்சாப். ஆட்ட நாயகனாக ஜெயவர்த்தனே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காலிங்வுட் அபாரம் - டெல்லி வெற்றி
இன்னொரு போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மேலும் ஒரு வெற்றியைப் பெற்றது. முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களைக் குவித்தது.
காலிங்வுட் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 75 ரன்களைக் குவித்தார். ஷேவாக் 35 ரன்களையும், வார்னர் 33 ரன்களையும் விளாசினர்.
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட்களை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைச் சந்தித்தது.
பெங்களூர் அணியில் கல்லிஸ் மட்டுமே சிறப்பாக ஆடி 54 ரன்களைக் குவித்தார். டெய்லர் 10 பந்துகளில் 22 ரன்களைக் குவித்தார். ராபின் உத்தப்பா 9 பந்துகளில் 12 ரன்களை எடுத்தார்.


Click it and Unblock the Notifications