
நிம்மதி
டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் தான் கேப்டன் ராகுல், நீ இந்த டெஸ்டில் விளையாடுகிறாய் என அறிவித்தார். அதை கேட்ட உடனே பெருமூச்சு விட்டு உனாட்கட் ஆகாயத்தை பார்த்த காட்சி வலிக்கு பிறகு நிச்சயம் வழி பிறக்கும் என்று நமக்கு உணர்த்தியது. ஜெர்சி பத்தில் நாணி, சாதித்த வெறியில் கத்துவாரே அதற்கு வாழும் உதாரணமாக உனாட்கட் திகழ்ந்தார்.

கடின உழைப்பு
இந்த 12 ஆண்டுகளில் அவர் ரஞ்சி சீசனில் எவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்று அந்த சிவப்பு பந்தகளுக்கு தான் தெரியும். உனாட்கட் கையில் இருப்பது வெறும் சிவப்பு நிற பந்து அல்ல. அது வியர்வை, ரத்தம் சிந்தி உருவாக்கிய வெற்றியின் அடையாளம். இந்த ஆண்ட தொடக்கத்தில் எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடு சிவப்பு நிற பந்தே என்று டிவிட் போட்டு இருக்க, அது வருடத்தில் முடிவில் நடந்துவிட்டது.

முதல் விக்கெட்
வாய்ப்பு கிடைத்தால் போதுமா, அதனை நிரூபிக்க வேண்டாமா. தனக்கு கையில் பந்து கிடைத்த உடன், தனது முழு சக்தியையும் திரட்டி பந்துவீசினார் உனாட்கட். எனினும் முதல் சில ஓவர்கல் அவருக்கு அந்த முதல் விக்கெட் என்ற பரிசு கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து போர் குதிரை போல, ஓடிய ஜெய்தேவ் உனாட்கட் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை 12 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றார்.

கட்டி அணைத்த வீரர்கள்
உனாட்கட் விக்கெட் வீழ்த்திய உடன், அங்கிருந்த விராட் கோலி அவரை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.கடந்த டெஸ்டில் சதம் விளசிய ஜாகீரின் விக்கெட்டை தான் உனாட்கட் பறித்தார். இதன் மூலம் முதல் விக்கெட் வீழ்த்த அதிக காலம் எடுத்து கொண்ட வீரர் என்ற சோகமான சாதனையை உனாட்கட் படைத்தார்.

2 விக்கெட்டுகள்
இதனைத் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய உனாட்கட், முஸ்பிகுர் ரஹிம்மின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மலம் முதல் இன்னிங்சில் 16 ஓவர்கள் வீசி வெறும் 50 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்த உனாட்கட், 2விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாகீர் கானுக்கு பிறகு இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் பெரியதாக சோபிக்கவில்லை. அந்த இடத்தை உனாட்கட் படைப்பாரா?


Click it and Unblock the Notifications











