Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னுடைய டிவிட்டை தவறாக புரிந்து கொண்டார்கள்.. 12 ஆண்டுக்கு பிறகு வாய்ப்பு.. உனாட்கட் நெகிழ்ச்சி

மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட அணியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜெய்தேவ் உனாட்கட் இடம்பிடித்து அசத்தினார். சௌராஷ்டிரா அணியின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கிய உனாட்கட், 2019-20 ஆண்டு ரஞ்சி சீசனில் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

கடந்த 3 சீசனில் மட்டும் உனாட்கட் 21 டெஸ்டில் விளையாடி 115 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். உனாட்கட், கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மீண்டும் ஒர வாய்ப்பு கொடு என்று போட்ட பதிவு, ரசிகர்களின் மனதை பிழிஞ்சது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உனாட்கட், முதல் டெஸ்ட் போட்டியில் தாம் விளையாடாத நிலையிலும், இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டதாக கூறினார்.

எனக்கு தெரியும்

எனக்கு தெரியும்

அதனை பார்த்ததும் இந்த ஜெர்சி எனக்கு சிறப்பாக பொருந்துவதாக புஜாரா கூறியதை உனாட்கட் நினைவு கூர்ந்தார். இத்தனை ஆண்டுகளாக புஜாரா, தமக்கு துணையாக நின்று ஆதரவு அளித்ததாகவும், வாய்ப்பு கிடைக்க போராடும் படி போராடு என்று ஊக்கப்படுத்தியதாகவும் கூறினார். எனக்கு நிச்சயம் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியும்.

அணிக்காக உழைத்தேன்

அணிக்காக உழைத்தேன்

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களும் கடந்த 4 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீசியதை பார்த்து எனக்கு ஊக்கம் கிடைத்தது. சௌராஷ்டிரா அணிக்கு கேப்டன் ஆனதும், நான் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினேன். வாய்ப்பு குறித்து எல்லாம் நினைக்கவில்லை. கேப்டனாக இருந்ததால் என்னை ப்ற்றி யோசிக்காமல், மற்றவர்களையும் பற்றி யோசித்து அணிக்காக கடுமையாக உழைத்தேன்.

டிவிட் குறித்து விளக்கம்

டிவிட் குறித்து விளக்கம்

நான் போட்ட டிவிட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் 2 ஆண்டுகளாக ரஞ்சி போட்டியில் விளையாட முடியவில்லை. இதனால் மீண்டும் விளையாட முடியாமல் போய்விடுமோ என்று நினைத்து தான் டியர் விப்பு நிற பந்தே, எனக்கு விளையாட மீண்டும் வாய்ப்பு கூடு என்று பதிவிட்டேன். ஆனால் நான் தேசிய அணியில் விளையாட ஆசைப்படுகிறேன் என்பது போல அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டது.

மனைவி சொன்ன வார்த்தை

மனைவி சொன்ன வார்த்தை

ஆனால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். நான் முதல் முறையாக இந்திய அணியில் விளையாடிய போது எனக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் என் மனைவி தான் நான்மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். வங்கதேச டெஸ்டில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், பரவாயில்லை மறுமுனையில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன். எனது முதல் விக்கெட் எடுப்பது தொடர்பாக ஆயிரம் முறை மனதில் நினைத்து பார்த்திருப்பேன்.

Story first published: Wednesday, December 28, 2022, 0:03 [IST]
Other articles published on Dec 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+