
ஆஷஸ் தொடரில் மாற்றம்
முழுவதும் வெண்மை நிறத்திலான ஜெர்சியை மட்டும் தான் அணிந்து விளையாடுவார்கள். தற்போது, ஆஷஸ் தொடரில் விளையாடும் வீரர்கள், தங்களின் பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சியுடன் விளையாடுகின்றனர்.
140 ஆண்டு வரலாறு
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் மூலம் டெஸ்ட் போட்டிகளின் 140 ஆண்டுகால வரலாறு மாற்றப்பட உள்ளது. முதன்முறையாக இந்த தொடரில் வீரர்களின் ஜெர்சியின் பின்புறம், அவர்களின் பெயர் மற்றும் ஜெர்சி எண் குறிப்பிடப்பட உள்ளது.

உறுதியானது தகவல்
அதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இதுகுறித்த தகவல் ஆரம்பத்தில் பரவிய நிலையில், தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.

மாற்றங்கள் இல்லை
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகின்றன. டெஸ்ட் தொடங்கியது முதல் இன்று வரை வீரர்களுக்கான ஜெர்சிகளில் எந்தவிதமான பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை. போட்டி விதிகள் மாறியபோதிலும், வெள்ளை உடைகள் மட்டுமே பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன.

ரசிகர்கள் ஏற்பார்களா?
ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் இருப்பதுபோல் அல்லாமல், ஜெர்சியின் பின்புறம் பெயர்கள் அச்சிடப்படாமல், வெள்ளை உடையுடனே டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டு வந்தது. தற்போது, இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது. அதற்கு ரசிகர்கள் எவ்வாறு இருக்கும் என்பது போக, போகவே தெரியும்.


Click it and Unblock the Notifications











