Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னா, ராயுடு இருக்கும் போது.. சிஎஸ்கே பயிற்சியாளராகும் ஜான்டி ரோட்ஸ்? ரகசியம் சொன்ன அஸ்வின்!

மும்பை: சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக பிரபல கிரிக்கெட் அனலிஸ்ட் பிரசன்னா தகவல் வெளியிட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு உள்ளிட்ட சிறந்த ஃபீல்டர்கள் சிஎஸ்கே அணியுடன் தொடர்பில் இருக்கும் சூழலில், ஜான்டி ரோட்ஸ் நியமனம் செய்யப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் விவாதமாகி இருக்கிறது.

2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நெருங்கிவிட்டது. ஏற்கனவே ஐபிஎல் உரிமையாளர்களுடன் பிசிசிஐ தலைமை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆலோசனைக்கு பின் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதனிடையே டிசம்பர் 2வது வாரத்தில் ஐபிஎல் மினி ஏலம் நடக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

Jhonty Rhodes

இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் பல்வேறு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த மாதம் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு ஜாகீர் கான் கொண்டு வரப்பட்டார். இதன்பின் பவுலிங் பயிற்சியாளராக மோகித் சர்மாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளன.

இதுதொடர்பாக அஸ்வின் தன்னுடைய நண்பரும், அனலிஸ்ட்டுமான பிரசன்னாவுடன் யூடியூப் சேனலில் பேசுகையில், சிஎஸ்கே அணியில் ஜாகீர் கான் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட போதும் சிலர் பயிற்சியாளர் குழுவில் தொடர்ந்து வருகின்றனர். ஸ்பின் பயிற்சியாளரான ஸ்ரீதரன் ஸ்ரீராம், அனலிஸ்ட் ஸ்ரீகாந்த் ஆகியோர் சிஎஸ்கே அணியுடன் தொடர்கின்றனர். பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி தொடரவில்லை.

ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறியுள்ளார். ஜான்டி ரோட்ஸ் ஏற்கனவே மும்பை, டெல்லி, பஞ்சாப், லக்னோ உள்ளிட்ட பல்வேறு அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்தியாவிலேயே குடியேறிவிட்ட சூழலில், ஜான்டி ரோட்ஸ் சிஎஸ்கே அணிக்குள் வருவதாக வெளியாகியுள்ள தகவல் விவாதமாகி உள்ளது.

சிஎஸ்கே அணிக்காக ஆடிய அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் சிறந்த ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக செயல்படக் கூடிய திறமையுடன் இருப்பவர்கள் தான். இருப்பினும் சிஎஸ்கே அணி ஜான்டி ரோட்ஸ் போன்ற பிரபலமானவர்களை ஒப்பந்தம் செய்ய துடிப்பது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

Story first published: Friday, October 16, 2026, 20:08 [IST]
Other articles published on Oct 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+