For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மச்சி.. ஐபிஎல் வரப் போகுது.. கொஞ்சம் ரன்னை மிச்சம் வச்சுக்கோ.. ராகுலை கலாய்த்த ஜிம்மி!

Recommended Video

Dhawan praised kl rahul|கே.எல். ராகுலை புகழ்ந்த தவான்

மவுண்ட் மாங்கானுய் : பேப்பர், சிசர்ஸ், ராக் விளையாட்டை விளையாட ரெடியா என்று நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் இந்திய துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுலுக்கு தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் சவால் விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த கே.எல். ராகுல், நம்ம ஆட்டத்தை ஏப்ரலில் பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலளித்துள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா -நியூசிலாந்து இடையிலான 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் ரன்களை குவித்த கே.எல் ராகுலுக்கு பாராட்டு தெரிவித்த நீசம், ஏப்ரல் மாதத்திற்கும் ரன்களை சேமித்து வைக்கும்படி அவரை கலாய்த்தார்.

தலா ஒரு தொடர்களை கைப்பற்றிய அணிகள்

தலா ஒரு தொடர்களை கைப்பற்றிய அணிகள்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்த அணியுடன் மோதிய முதல் சர்வதேச டி20 தொடரின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அந்த அணியை ஒயிட்வாஷ் செய்த நிலையில், அடுத்ததாக இரு அணிகளும் மோதிய சர்வதேச ஒருநாள் தொடரில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து பழிதீர்த்துக் கொண்டது. இரு அணிகளும் தலா ஒரு தொடரை கைகொண்டுள்ள நிலையில் வரும் 21ம் தேதி முதல் இரு அணிகளுக்கிடையில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இந்தியா -நியூசிலாந்து 3வது போட்டி

கடந்த செவ்வாயன்று இரு அணிகளும் மோதிய சர்வதேச ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இந்தியா தோல்வியுற்றது. ஆயினும் அந்தப் போட்டியில் கே.எல். ராகுல் அடித்த சதம் ரசிகர்களை உற்சாகப் படுத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் வீரர் ஜிம்மி நீசம், கே.எல். ராகுலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு பேப்பர், சிசர்ஸ் மற்றும் ராக் என்று பிரபல விளையாட்டை நினைவுகூறும் வகையில் கேப்ஷனை வெளியிட்டிருந்தார். கைகளால் விளையாடப்படும் விளையாட்டை இருவரும் விளையாடுவதாக அந்த புகைப்படம் அமைந்திருந்தது.

பதிலளித்த கே.எல். ராகுல்

நீசமின் இந்த டிவிட்டர் பதிவிற்கு பதிலளித்த கே.எல். ராகுல் இதை வரும் ஏப்ரல் மாதத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் மைதானத்தில் சந்திக்கிறேன் என்றும் கமெண்ட் செய்துள்ளார். வரும் மார்ச் மாதத்தின் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் முதலில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் கே.எல் .ராகுல் வழிநடத்தும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஜிம்மி நீசமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கலாய்த்த ஜிம்மி நீசம்

நேற்று முன்தினம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் சதமடித்த கே.எல். ராகுல், இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 4வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து தனது டிவிட்டர் பதிவில் ஜிம்மி நீசம், கே.எல். ராகுலை மீண்டும் கலாய்த்தார். ஐபிஎல் போட்டிகளுக்காக கொஞ்சம் ரன்களை மிச்சம் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

ஐசிசி கலாய்ப்பு

இதனிடையே, இவர்களின் டிவிட்டர் உரையாடலுக்கு பதிலளிக்கும் விதமாக சூப்பர் ஓவருக்கு பதிலாக இந்த விளையாட்டை விளையாடலாமா என்று ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. மொத்தத்தில் டிவிட்டர் பக்கத்தில் இவர்களின் உரையாடல் மூலம் பேப்பர், சிசர்ஸ், ராக் விளையாட்டு டிரெண்டிங் ஆனது.

Story first published: Thursday, February 13, 2020, 11:34 [IST]
Other articles published on Feb 13, 2020
English summary
KL Rahul Responds To Jimmy Neesham's Challenge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+