Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-காக வந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள்.. ஜியோ நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்கள்.. இனி பிரச்சினை இல்லை

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பார்ப்பதற்காக ரசிகர்களுக்கு அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது ஜியோ நிறுவனம். இதன் மூலம் எந்தவித டேட்டா பிரச்சினையும் இல்லாமல் முழு போட்டியையும் கண்டுகளிக்க முடியும்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்றிருந்த இந்திய வீரர்களும், தங்களது அணி முகாம்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

 ஐபிஎல் 2023

ஐபிஎல் 2023

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தாண்டு வித்தியாசமான ஒளிபரப்பு இருக்கப்போகிறது. ஏனென்றால் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமாஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. இதன் மூலம் 2 வெவ்வேறு கமண்ட்ரிகளுடன் ரசிகர்கள் போட்டிகளை பார்க்கலாம். இதில் டிஜிட்டலில் கூடுதல் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜியோவின் ஆஃபர்

ஜியோவின் ஆஃபர்

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை டிஜிட்டல் முறையில் ரசிகர்கள் அதிகம் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.999, ரூ.399, ரூ.219 என்ற மூன்று திட்டங்களில் யாருமே எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அன்லிமிட்டட் பேக்கேஜை அள்ளி வீசியுள்ளது. இந்த மூன்று திட்டங்களிலும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாக்கள் வந்துவிடும். ஆனால் எதிர்பார்க்காத இன்னொரு டேட்டாவும் கூடுதலாக வருகிறது.

ரீசார்ஜ் விவரம்

ரீசார்ஜ் விவரம்

அதாவது ரூ.219 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு தினம்தோறும் 3 ஜிபி டேட்டாக்கள் வழங்கப்படும். இத்துடன் சேர்த்து ரூ.25 ( 2 ஜிபி ) டேட்டாக்கான கூப்பன் இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினம்தோறும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் சேர்த்து ரூ.61 ( 6 ஜிபி ) டேட்டாக்கான கூப்பன் இலவசமாக தரப்படும். ரூ.999 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு நாள்தோறும் 3 ஜிபி டேட்டா தரப்படும். இதனுடன் ரூ.241 ( 40 ஜிபி ) டேட்டாக்கான கூப்பன் கொடுக்கப்படுகிறது.

 மாஸ்டர் ப்ளான்

மாஸ்டர் ப்ளான்

ஜியோ சினிமா மூலம் ஒரு ஐபிஎல் போட்டியை முழுவதுமாக கண்டு ரசிக்க சராசரியாக 2 ஜிபி டேட்டாக்கள் போதுமானதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே நாளில் 2 லீக் போட்டிகளும் நடைபெறும் என்பதால் அதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் சிரமப்படலாம். எனவே அவர்களுக்காக இந்த புதிய திட்டங்களை கொண்டு வருகிறது ஜியோ நிறுவனம்.

கூடுதல் டேட்டா திட்டம்

கூடுதல் டேட்டா திட்டம்

இதில் கூடுதல் டேட்டாக்கான பேக்கேஜ்களும் கொண்டு வரப்படுகிறது. ரூ.222க்கு ரீசார்ஜ் செய்தால் 50 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இதற்கு வேலிட்டி காலம் எதுவும் இல்லை. ரூ.444க்கு ரீசார்ஜ் செய்தால் 100 ஜிபி டேட்டா கிடைக்கும். இதற்கு 60 நாட்கள் வேலிடிட்டி ஆகும். ரூ.667க்கு ரீசார்ஜ் செய்தால் 150 ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி காலம் 90 நாட்கள் ஆகும்.

Story first published: Friday, March 24, 2023, 14:49 [IST]
Other articles published on Mar 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+