Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு ஐபிஎல் போட்டியை பார்க்க 25 ஜிபி டேடா தேவை.. ஜியோ சினிமா வச்ச செக்.. இதோ முழு தகவல்

மும்பை : ஒரு காலத்தில் கிரிக்கெட் ஸ்கோரை ரேடியோவில் கேட்ட காலம் போய் டிவி ,மொபைல் என தற்போது முற்றிலும் மாறிவிட்டது. கிரிக்கெட் போட்டியை பார்க்க விடுமுறை போட்ட காலம் போய் தற்போது அலுவலகத்தில் மொபைலில் அமர்ந்து கொண்டு பார்க்கும் காலம் வந்துவிட்டது.

ஐபிஎல் போட்டிகள் தற்போது தொலைக்காட்சியில் பார்ப்பதை விட மொபைலில் பார்க்கும் எண்ணிக்கை தான் அதிகமாகி விட்டது. சென்னை, மும்பை மோதிய ஆட்டத்தை எல்லாம் சுமார் 13 கோடி பேர் ஹாட் ஸ்டாரில் பார்த்த சாதனையும் கடந்த ஆண்டு நடைபெற்றது.

இதன் காரணமாக தற்போது ஐபிஎல் உரிமத்தை தொலைக்காட்சியை விட ஓ டி டி -யில் பார்ப்பதற்கு தான் அதிக பணம் பி சி சி ஐ க்கு கிடைத்துள்ளது.

ஜியோ சினிமா

ஜியோ சினிமா

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்த்து வந்த நாம் இனி ஜியோ சினிமாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பார்க்க உள்ளோம். ஐபிஎல் உரிமையை டிஸ்னி ஹாட் ஸ்டார் இழந்த நிலையில் சுமார் 2 கோடி பேர் தங்களுடைய ஹாட் ஸ்டார் சேவையை நிறுத்தி விட்டார்கள். இந்த நிலையில் தற்போது ஜியோ சினிமா ஐபிஎல் போட்டிகளை நேரலை செய்ய உள்ளது.

முன்னேறிய தரம்

முன்னேறிய தரம்

ஏற்கனவே பிபா உலகக் கோப்பையை ஜியோ சினிமா நேரலை செய்த போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் உலகக்கோப்பை கால்பந்து போட்டி செல்ல செல்ல ஜியோ சினிமா தங்களுடைய சேவை தரத்தை முன்னேற்றியது. இதனால் கிரிக்கெட் பார்க்கும் போது எந்த சிக்கலும் ஏற்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கேமிரா சாய்ஸ்

கேமிரா சாய்ஸ்

மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ஜியோ சினிமாவை காசுக்கட்டி பார்க்கத் தேவையில்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஜியோ சினிமா ஆப்பிள் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பொதுவாக கிரிக்கெட்டை நாம் சேனல்கள் எந்த கேமராவில் காட்டுகிறார்களோ அந்த கேமரா கோணத்தில் தான் நாம் தொலைக்காட்சியில் பார்ப்போம். ஆனால் ஜியோ ஆப்பில் அனைத்து கேமரா கோணங்கள் வழியாகவும் பார்க்கும் வாய்ப்பை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.

4K தொழில்நுட்பம்

4K தொழில்நுட்பம்

உதாரணத்திற்கு ஸ்பைடி கேமிரா மூலம் போட்டியை பார்க்கலாம். பேட்ஸ்மேன்கள் திசையில் இருக்கும் கேமராவிலிருந்தும் போட்டியை நாம் பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வர்ணனையாளர்களுடன் நாம் சாட் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜியோ சினிமா தெரிவித்துள்ளது. இதேபோன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை 4k தொழில்நுட்ப வசதியில் நாம் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என ஜியோ சினிமா கூறியுள்ளது.

டேடா செலவு

டேடா செலவு

ஆனால் 4k தொழில்நுட்பத்தில் நாம் ஒரு போட்டியை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு 25 ஜிபி டேட்டா செலவாகும் என ஜியோ சினிமா தெரிவித்துள்ளது.மேலும் ஃபுல் hd தொழில்நுட்பத்தில் ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்க குறைந்தபட்சம் 12 ஜிபி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண குவாலிட்டியில் கிரிக்கெட் போட்டியை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு குறைந்தபட்சம் ஒரு போட்டிக்கு இரண்டு ஜிபி டேட்டா தேவை என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.

அனுபவம்

அனுபவம்

இதன் மூலம் குறைந்தபட்சம் இரண்டு ஜிபி முதல் 25 gb வரை ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்க தேவைப்படும். இதேபோன்று கிரிக்கெட் போட்டியை 360 டிகிரி கோணத்தில் பார்க்கவும் தனி கருவி ஒன்றை ஜியோ உருவாக்க உள்ளது. இதனால் இம்முறை ஜியோ சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தர இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Story first published: Wednesday, February 22, 2023, 12:08 [IST]
Other articles published on Feb 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+