Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி டிராபியில் வரலாற்றில் 57 ஆண்டு ரெக்கார்டை உடைத்த ஜம்மு - காஷ்மீர் அணி.. டெல்லியை வீழ்த்தியது

டெல்லி: இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் பெரிய தொடரான ரஞ்சி டிராபியில், ஜம்மு காஷ்மீர் அணி தனது 57 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணியை வீழ்த்தி சரித்திர சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 42 முறை தோல்வியைச் சந்தித்த நிலையில், டெல்லி அணிக்கு எதிராக, தனது 43-வது முயற்சியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து, நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஜம்மு காஷ்மீர் அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து வெளிப்படுத்திய அபார ஆட்டம், இந்த வரலாற்று வெற்றிக்கு வித்திட்டது.

JK vs Delhi Ranji Trophy Jammu - Kashmir Creates History Defeats Delhi in Ranji Trophy After 57-Year Wait

டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அந்த அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கிய டெல்லி அணி, தனது முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காஷ்மீர் தரப்பில் ஆகிப் நபி அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணி, கேப்டன் பராஸ் டோக்ராவின் 100 ரன்கள் மற்றும் அப்துல் சமதின் முக்கியமான 85 ரன்கள் உதவியுடன் 330 ரன்களைக் குவித்தது. இதன்மூலம், முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் என்ற முன்னிலையைப் பெற்றது.

பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய டெல்லி அணி, மீண்டும் காஷ்மீர் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இளம் சுழற்பந்துவீச்சாளர் வம்சஜ் சர்மா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, டெல்லி அணி 277 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சதமடித்த கம்ரான் இக்பால்:

இதையடுத்து, 179 ரன்கள் என்ற சவாலான வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் கம்ரான் இக்பால் அரணாக நின்றார். அதிரடியாக விளையாடிய அவர், வெறும் 147 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் விளாசி, அணியின் வரலாற்று வெற்றியை எளிதாக்கினார். இறுதியில், ஜம்மு காஷ்மீர் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்து சரித்திரம் படைத்தது.

இதற்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய 42 போட்டிகளில், டெல்லி அணி 37 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகள் டிராவிலும் முடிந்திருந்தன. ஒரு போட்டிகூட வெற்றி பெறாத நிலையில், இந்த வெற்றி ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட்டின் வளர்ச்சியையும், வீரர்களின் மன உறுதியையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம், குரூப் 'டி' புள்ளிப் பட்டியலில் ஜம்மு காஷ்மீர் அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் தங்களது முத்திரையைப் பதிக்கும் காஷ்மீர் அணியின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக என்றென்றும் நினைவுகூரப்படும்.

Story first published: Tuesday, November 11, 2025, 13:48 [IST]
Other articles published on Nov 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+