Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜோ ரூட் அபார சாதனை.. இங்கிலாந்து அணி அபார வெற்றி.. வீணானது நியூசிலாந்தின் முயற்சி

லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியின் 2வது இன்னிங்சில் ஜோ ரூட் தனது 26வது சதத்தை விளாசியுள்ளார்.

Recommended Video

ENG vs NZ : Century போட்டு அசத்திய Joe Root.. England-க்கு முதல் வெற்றி #Cricket

இந்த இன்னிங்ஸ் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் படைத்தார்.

1990 களில் பிறந்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10 அயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையையும் ஜோ ரூட் பெற்றார்.

132 ரன்களில் ஆல் அவுட்

132 ரன்களில் ஆல் அவுட்

புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என்ற புதிய பயணத்தை இங்கிலாந்து அணி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் இங்கிலாந்து விளையாடியது.

9 ரன்கள் முன்னிலை

9 ரன்கள் முன்னிலை

92 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி 100 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த தடுமாறியது. பிறகு அந்த அணியால் 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. 2வது இன்னிங்சிலும் வில்லியம்சன், வில் யங், டாம் லாத்தம், கான்வே உள்ளிட்ட வீரர்கள் சொதப்பினர்.

டேரல் மிட்செல் சதம்

டேரல் மிட்செல் சதம்

இருப்பினும் டேரல் மிட்செல் அபாரமாக விளையாடி சதமும்,டாம் பிளாண்டல் 96 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொதப்பியதால் நியூசிலாந்து அணி 285 ரன்களில் ஆட்டமிழந்தது. 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் லீஸ் 20 ரன்களும், ஷாக் கிராலி 9 ரன்களும், போப் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

இதனையடுத்து களத்தில் சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்டோக்ஸ் 54 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் தனது 26வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 4வது நாள் ஆட்டம் 15வது ஓவரிலே முடிந்ததால், இன்றைய நாளுக்கான டிக்கெட் விற்பனை திரும்ப வழங்கப்பட உள்ளது.

Story first published: Sunday, June 5, 2022, 20:02 [IST]
Other articles published on Jun 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+