Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே தொடரால் இப்படி ஒரு மாற்றமா.. ஐசிசி தரவரிசைப்பட்டியல்.. புதிய உச்சம் சென்ற இந்திய வீரர்!

அமீரகம்: ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் இந்திய இளம் வீரர் புதிய உச்சத்தை கண்டுள்ளார்.

ஐசிசி சார்பில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர் என 3 பிரிவுகளாக தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் பல்வேறு ஆச்சரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

ஐசிசி தரவரிசைப் பட்டியல்

ஐசிசி தரவரிசைப் பட்டியல்

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், நம்பர். 1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 சதங்களை விளாசி அசத்தினார். மேலும் அலெக்ஸ்டர் குக்கிற்கு அடுத்ததாக 10,000 டெஸ்ட் ரன்களை கடந்த 2வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

ஜோ ரூட் அசத்தல்

ஜோ ரூட் அசத்தல்

இதன் மூலம் ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தார். 2வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் லாபஸ்சேக்னே 892 புள்ளிகளுடன் இருக்கிறார். இவர்களை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித், பாபர் அசாம், கேன் வில்லியம்சன் என இருக்கின்றனர். இந்திய வீரர் விராட் கோலி 10வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சுக்கான தரவரிசை

பந்துவீச்சுக்கான தரவரிசை

டெஸ்ட் பந்துவீச்சை பொறுத்தவரையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து 2வது இடத்தில் நீடித்து வருகிறார். ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 3வது இடத்தை பிடித்துள்ளார். சாஹீன் அஃப்ரிடி, ரபாடா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இஷான் முன்னேற்றம்

இஷான் முன்னேற்றம்

இதே போல சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் இஷான் கிஷான் டாப் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். தென்னாப்பிரிக்க தொடரில் 3 போட்டிகளில் இஷான் கிஷான் 164 ரன்களை குவித்தார். இதனையடுத்து 689 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Story first published: Wednesday, June 15, 2022, 18:45 [IST]
Other articles published on Jun 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+