Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்திய அணி.. 8 விக்கெட் இழப்பு!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் இன்னிங்சை இந்திய அணி ஆடி வருகிறது.

முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து தற்போது ஆடிவரும் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஜேக் லீச் இணைந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

112 ரன்களில் இங்கிலாந்து ஆல்-அவுட்

112 ரன்களில் இங்கிலாந்து ஆல்-அவுட்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தற்போது பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று நேற்றைய தினம் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜோ ரூட் சிறப்பு

ஜோ ரூட் சிறப்பு

தொடர்ந்து ஆடிவரும் இந்திய அணி நேற்றைய தினம் 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று தனது ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்த நிலையில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இங்கிலாந்தின் ஜோ ரூட் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரூட்

3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரூட்

ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகிய இடதுகை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து 1, 0 மற்றும் 0 ரன்களில் வீழ்த்தியுள்ளார். தற்போது ரவி அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் ஆடி வருகின்றனர். இந்திய அணி 134 ரன்களை மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. வெறுமனே 29 ரன்களில் 5 விக்கெட்டுகளை இந்தியா இழந்துள்ளது.

ஜேக் லீச் 4 விக்கெட்டுகள்

ஜேக் லீச் 4 விக்கெட்டுகள்

இதனிடையே இங்கிலாந்து அணியின் ஜேக் லீச்சும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட துவக்க வீரர் ரோகித் சர்மாவை 66 ரன்களில் வீழ்த்தியுள்ளார் லீச். அடுத்ததாக புஜாரா, விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை நேற்றைய தினம் எடுத்த அவர், இன்று தொடர்ந்து ரஹானே, ரோகித்தின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Thursday, February 25, 2021, 23:34 [IST]
Other articles published on Feb 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+