Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து ஸ்டார் பேட்ஸ்மேன் ஜோ ரூட் தந்தையானார்! ஒரு நாள் தொடரில் பங்கேற்பது உறுதி

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனான ஜோ ரூட்டுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சார்பாக அதிக ரன்கள் குவித்தவர் ஜோ ரூட். இருப்பினும் இந்திய வீரர்களின் ஆதிக்கத்தால் இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

Joe Root becomes father, will play 1st India ODI

இந்நிலையில், இங்கிலாந்து அணி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தாயகம் திரும்பியது. வரும் 15ம் தேதி முதல் இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் முதல் போட்டி புனேயில் நடக்கிறது.

இந்த போட்டித்தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் ஆடுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்துவந்தது. 26 வயது ஜோ ரூட்டின் மனைவி கேர்ரி கொட்டரல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது இதற்கு காரணம். இந்நிலையில், கொட்டரல் தற்போது அழகான ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.

எனவே, ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடுவது உறுதியாகியுள்ளது. ஆனால் குழந்தையை கொஞ்சிவிட்டு மெதுவாகத்தான் இந்தியா வர உள்ளாராம் ஜோ ரூட். இங்கிலாந்து அணியின் பிற வீரர்கள் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டனர். ஜோ ரூட் புனே போட்டிக்கு முன்பாகவே இந்தியா வர உள்ளாராம்.

Story first published: Monday, January 9, 2017, 17:56 [IST]
Other articles published on Jan 9, 2017
Read in English: Joe Root becomes father
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+