Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் வரலாற்றில் 36 செஞ்சுரி.. நூறு 50+ ஸ்கோர்.. டிராவிட் சாதனையை உடைத்து எறிந்த ஜோ ரூட்

வெல்லிங்டன்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 36 ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 73 ரன்கள் எடுத்து இருந்தார். மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது அவர் தொடர்ந்து ரன் சேர்த்து தனது 36 ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.

130 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 36 சதங்கள் அடித்து இருப்பதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளுக்கு எதிராக தலா ஒரு சதமும், இலங்கை அணிக்கு எதிராக இரண்டு சதங்களையும் அடித்து இருக்கிறார்.

joe root nz vs eng england

இந்த ஆறு சதங்கள் அடித்ததன் மூலம் ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார். மொத்தம் 13 வீரர்கள் ஒரே ஆண்டில் டெஸ்ட் சதங்களை எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெஸ்ட் போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்களை அதிக முறை எடுத்த வீரர்கள் பட்டியலில் அவர் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார்.

ராகுல் டிராவிட் மொத்தம் 99 முறை 50க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்து இருக்கும் நிலையில், அதை முந்தி இருக்கும் ஜோ ரூட் தற்போது 100 முறை 50க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை எடுத்து இருக்கிறார். 36 சதம் மற்றும் 64 அரை சதங்களை அடித்து இருக்கிறார் ஜோ ரூட். இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (119 முறை), ஜாக்கஸ் காலிஸ் (103 முறை), ரிக்கி பாண்டிங் (103) உள்ளனர்.

Story first published: Sunday, December 8, 2024, 9:05 [IST]
Other articles published on Dec 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+