Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முறைகேடு நடக்கிறது.. மேட்ச் முடிந்ததும்.. ரெப்ரியிடம் முறையிட்ட இங்கிலாந்து அணி.. ரூட் ஷாக் முடிவு!

அகமதாபாத்: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நடுவர் பாரபட்சமாக செயல்படுவதாக ஆட்டத்தின் ரெப்ரியிடம் இங்கிலாந்து வீரர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.சிறப்பாக பவுலிங் செய்த அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

தற்போது ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

இந்தியா

இந்தியா

நேற்று இந்தியாவிற்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நிறைய முறை நடுவர்கள் தீர்ப்பு கேள்விக்குள்ளானது. லீச் அடித்த பந்தை புஜாரா கேட்ச் பிடித்த போது மூன்றாவது நடுவர் விக்கெட் கொடுத்தார். ஆனால் இதை புஜாரா சரியாக பிடிக்கவில்லை, பந்து கீழே குத்திவிட்டது என்று விவாதம் நிலவி வருகிறது.

 பேட்டிங்

பேட்டிங்

பல ஆங்கிள் கேமரா சோதனை செய்யப்பட்டு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா ஸ்டம்பிட் விக்கெட் விழ வாய்ப்பு இருந்தது. ஆனால் இதையும் கூட மூன்றாவது நடுவர் சோதனை செய்யவில்லை. இன்னொரு பக்கம் சுப்மான் கில் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்தார்.

விக்கெட் இல்லை

விக்கெட் இல்லை

ஆனால் இது விக்கெட் இல்லை என்று மூன்றாவது நடுவர் தீர்ப்பளித்தார். இதெல்லாம் போக நேற்று இங்கிலாந்து வீரர்கள் ரூட், ஸ்டோக்ஸ் ஆகியோர் அம்பயர்ஸ் கால் மூலமே அவுட் ஆனார்கள். இதனால் மொத்தமாக நடுவர்களின் தீர்ப்புகள் மீது இங்கிலாந்து அணி கோபத்தில் உள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இதன் காரணமாக நேற்று ஆட்டத்திற்கு பின் இங்கிலாந்து அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் நேராக போட்டியின் ரெப்ரியிடம் புகார் வைத்துள்ளனர். மூன்றாவது நடுவர் பாரபட்சம் காட்டுவது போல தெரிகிறது. இதில் ரெப்ரி தலையிட வேண்டும் என்று இங்கிலாந்து அணி வீரர்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

Story first published: Thursday, February 25, 2021, 10:54 [IST]
Other articles published on Feb 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+