Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விரிசல்…!! அரசியல் செய்கிறாரா கேப்டன் ஜோ ரூட்..??

பிரிஸ்பேன்: அரசியல் இல்லாத இடம் எங்கும் இருக்காது போல.. தற்போது அது இங்கிலாந்து கிரிக்கெட் அணியையும் விட்டு வைக்கவில்லை.

நம்ம ஊரில் தமிழக வீரர் அஸ்வினை வெளியே உட்கார வைத்தது போல, இங்கிலாந்து அணியில் உள்ள சீனியர்களை வெளியே உட்கார வைக்கிறார் கேப்டன் ஜோ ரூட்.

அதனை வெளிப்படையாக செய்யாமல் டெக்னிக்கலாக காய் நகர்த்துகிறார் ஜோ ரூட். இதனால் அந்த அணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்

அரசியல்

இங்கிலாந்து அணியின் முக்கிய சீனியர்கள் ஆண்டர்சன் மற்றும் பிராட் ஆவர். இந்த நிலையில், ஆஷஸ் முதல் டெஸ்ட்டில் இருவருக்கும் வாய்ப்பு தராமல் ஜோ ரூட் பெஞ்சில் அமர வைத்தார் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இருவரும் அணியில் இடம்பெற்று இருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி அளித்திருக்க முடியும்.

சுழற்சி முறை

சுழற்சி முறை

சீனியர்களை சும்மா வெளியே அனுப்ப முடியாது அல்லவா, அதற்கு அவர் பயன்படுத்திய டெக்னிக் தான் சுழற்சி முறை. கொரோனா காலத்தில் வீரர்கள் பயோ பபுளில் இருப்பதால், அவர்களது மனம் தொய்வு அடையும். இதனை கருத்தில் கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த முறை தான் இது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஆனால் ஆஷஸ் போன்ற நெடுந்தொடரில் 2 டெஸ்ட் போட்டிக்கு பிறகு தான் சுழற்சி முறையில் வீரர்களுக்கு ஓய்வு அளிப்பார்கள். ஆனால் தொடர் தொடங்கும் முன்பே சுழற்சி முறை என்ற பேரில் சீனியர்களை ஜோ ரூட் உட்கார வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாம் முதல் டெஸ்டில் விளையாடாமல் போனது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக பிராட் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

Recommended Video

Nathan Lyon takes 400th Test wicket | Ashes Brisbane Test | AUS vs ENG | OneIndia Tamil
விளக்கம்

விளக்கம்

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் தாம் விளையாடி இருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என்றும் பிராட் கருத்து தெரிவித்துள்ளார். ஆண்டர்சனை விட பிராட் இளையவர் தான், .அவரால் 5 டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து விளையாட முடியும். ஆனால் ஜோ ரூட் தரப்பு, பிராட் காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு வந்துள்ளதால் அவரது பணிச்சுமையை குறைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Story first published: Monday, December 13, 2021, 10:40 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+