மனிதாபிமானம் கிலோ என்ன விலை? - ஜோ ரூட் '200' அலப்பறைகள்
சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தது மட்டுமில்லாமல், பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி இருக்கிறார் ஜோ ரூட்.
சேப்பாக் பிட்ச் இப்படி காலை வாரும் என்று இந்திய வீரர்கள் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். முதல் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்து, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் வரை, இந்திய அணி முழுமையாக அரைமணி நேரம் கூட ஆதிக்கம் செலுத்தவில்லை.
குறிப்பாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், மனதாபிமானம் கிலோ என்ன விலை என்று கேட்டுவிட்டு 200 ரன்கள் அடித்து அலப்பறை செய்திருக்கிறார். இதில், 218 ரன்களில் அவுட்டாகிவிட்டோமே என்று பீலிங்ஃஸ் வேறு..

4வது இரட்டை சதம்
இந்திய பவுலர்களை ஏகத்துக்கு சோதித்த ஜோ ரூட்டின் 4-வது டெஸ்ட் இரட்டை சதம் இது. சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக 286 ரன்களும், அடுத்ததாக ஒரு சதம் (186) அடித்த நிலையில், சென்னையில் இன்று இரட்டை சதம் அடித்துள்ளார்.

நெக்ஸ்ட் டூ பிராட்மேன்
கிரிக்கெட் உலகில் 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோ ரூட் தான். அதுமட்டுமின்றி, டான் பிராட்மேனுக்கு பிறகு டெஸ்ட்போட்டிகளில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் 150 ரன்களுக்கு மேல் அடித்த 2-வது கேப்டன் எனும் பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார்.

7வது வீரர்
அதேபோல், தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் அடித்த 7-வது வீரராகியுள்ளார் ரூட். இதற்கு முன் டாம் லாதம், சங்கக்காரா, முடாசர் நாசர் (Mudassar Nazar), ஜாகீர் அப்பாஸ், டான் பிராட்மேன், வாலே ஹேமண்ட் ஆகியோர் இச்சாதனையை படைத்திருக்கின்றனர்.

100வது டெஸ்ட்டில் சதம்
மேலும், 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 9-வது வீரர் எனும் பெருமையை ரூட் பெற்றுள்ளார்.
கவுட்ரே - 104
ஜாவித் மியான்தத் - 145
கிரீனிட்ஜ் - 149
அலெக் ஸ்டீவார்ட் - 105
இன்சமாம் - 184
பாண்டிங் - 120 & 143*
கிரேம் ஸ்மித் - 131
ஆம்லா - 134
ஜோ ரூட் - இன்று


Click it and Unblock the Notifications