Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராகுல் டிராவிட்டின் இமாலய டெஸ்ட் ரெக்கார்டை காலி செய்த ஜோ ரூட்.. இது பேட்டிங் அல்ல.. ஃபீல்டிங் சாதனை

லீட்ஸ்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிடின் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஷ் டங் வீசிய பந்தில் ஷர்துல் தாக்கூர் கொடுத்த கேட்சை பிடித்து, ஜோ ரூட் தனது 210ஆவது டெஸ்ட் கேட்சைப் பதிவு செய்தார். இதன் மூலம், ராகுல் டிராவிடின் 210 கேட்ச் சாதனையை அவர் எட்டியுள்ளார்.

IND vs ENG Joe Root Rahul Dravid India vs England Anderson-Tendulkar Trophy

ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 301 இன்னிங்ஸ்களில் 210 கேட்சுகளைப் பிடித்திருந்தார். ஆனால், ஜோ ரூட் 154 டெஸ்ட் போட்டிகளில் 293 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை எட்டியுள்ளார். இது அவரது கேட்ச்-பெர்-இன்னிங்ஸ் விகிதம் (0.716) டிராவிட்டின் விகிதத்தை (0.697) முந்துவதை வெளிப்படுத்துகிறது.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இலங்கையின் மகேலா ஜெயவர்தனே (205 கேட்சுகள், 149 போட்டிகள்) உள்ளார். நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜாக்கஸ் காலிஸ் (இருவரும் 200 கேட்சுகள்) உள்ளனர். தற்போது ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே இந்த சாதனையை முறியடிக்கக் கூடிய நிலையில் உள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி 465 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் (137) மற்றும் ரிஷப் பண்ட் (128) ஆகியோரின் சதங்களால் 364 ரன்கள் எடுக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு 371 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது, இன்னும் 350 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்தப் போட்டியில் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் (58 பந்துகள்) மட்டுமே எடுத்தார், ஜஸ்பிரித் பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார். ஆனால், ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 371 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் இங்கிலாந்து அணியில் மூத்த வீரராக இருக்கும் ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி பெரிய இன்னிங்ஸ் ஆடினால், அணியின் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது.

ஜோ ரூட் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேனாக உள்ளார். 154 டெஸ்ட் போட்டிகளில் 13,034 ரன்கள் எடுத்துள்ள அவர், 50.71 என்ற சராசரியுடன் 36 சதங்களும், 65 அரைசதங்களும் அடித்துள்ளார்.

Story first published: Tuesday, June 24, 2025, 11:28 [IST]
Other articles published on Jun 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+