Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100வது டெஸ்ட் போட்டியில் 100 ரன்கள்... சென்னையில் இங்கிலாந்து கேப்டன் அதிரடி!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

உணவு இடைவேளைக்கு முன்பு 2 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்த நிலையில் அணியின் கேப்டன் ஜோ ரூட் மற்றும் துவக்க வீரர் சிப்லி ஆகியோர் இணைந்து அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர்.

கேப்டன் ஜோ ரூட் தன்னுடைய 100வது போட்டியான இந்த போட்டியில் சதத்தை அடித்து அதிரடி கிளப்பியுள்ளார்.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பு அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பின்பு களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் மற்றும் சிப்லி சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

இங்கிலாந்து அதிரடி

இங்கிலாந்து அதிரடி

இங்கிலாந்து அணி 78 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் அதிரடி சதத்தை விளாசியுள்ளார். தன்னுடைய 100வது போட்டியான இந்த போட்டியில் தனது அதிரடியை நிரூபித்துள்ளார் ரூட். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியா சிப்லி 83 ரன்களை அடித்துள்ளார்.

அடுத்தடுத்த சதம்

அடுத்தடுத்த சதம்

கடந்த இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மோதிய நிலையில் முதல் போட்டியில் இரட்டை சதமும் இரண்டாவது போட்டியில் சதமும் அடித்திருந்தார் ஜோ ரூட். இந்நிலையில் 98, 99 மற்றும் 100வது என தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இதன்மூலம் ரூட்டிற்கு கிடைத்துள்ளது.

500 ரன்கள் குவிப்பு

500 ரன்கள் குவிப்பு

மேலும் இந்த 2021 ஜோ ரூட்டிற்கு மிகவும் சிறப்பாக துவங்கியுள்ளது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு மாதத்திலேயே 500 ரன்களை அவர் குவித்துள்ளார். மேலும் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இலங்கைக்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளில் 228 மற்றும் 186 ரன்களை அவர் அடித்திருந்த நிலையில் தற்போது சதத்தை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 5, 2021, 17:06 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+