Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜோ ரூட்டை மாதிரி ஸ்பின்னை விளையாட முடியாது... எங்களோட ஆட்டத்தை எளிதாக்கிட்டாரு!

சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

நேற்றைய 2வது நாள் ஆட்டத்தின் இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 555 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்திருந்தார்.

இந்நிலையில் ஜோ ரூட் தங்களது பேட்டிங்கை எளிதாக்கியதாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் கடந்த 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி, இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 555 ரன்களை கடந்து ஆடி வருகிறது.

600ஐ தாண்டிய ரூட் ஸ்கோர்

600ஐ தாண்டிய ரூட் ஸ்கோர்

அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். கடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் இரட்டை சதத்தை அடித்த நிலையில், ஆண்டு துவங்கிய ஒரு மாதத்திலேயே அவரது டெஸ்ட் ஸ்கோர் 600ஐ கடந்துள்ளது.

சிறப்பாக எதிர்கொள்ளும் ரூட்

சிறப்பாக எதிர்கொள்ளும் ரூட்

இந்நிலையில் ஜோ ரூட்டை போல ஸ்பின் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு ஆடுவதற்கு இங்கிலாந்து அணியில் அதிகமான வீரர்கள் யாரும் இல்லை என்று அந்த அணியின் டெஸ்ட் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்பின் பந்துகளில் ஜோ ரூட் ஆதிக்கம் செலுத்தி விளையாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் பாராட்டு

பென் ஸ்டோக்ஸ் பாராட்டு

அவர் இந்தியாவிற்கு எதிரான இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடியுள்ளதாகவும் தங்களது பேட்டிங்கை எளிதாக்கியுள்ளதாகவும் ஸ்டோக்ஸ் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் நேற்றைய தினம் விளையாடிய ஸ்டோக்ஸ், 82 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 7, 2021, 11:20 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+