
சென்னை
சென்னையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். முக்கியமாக இவர் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார்.சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்ற பிட்ச் ஆகும். இதனால் ஸ்பின் பவுலர்கள் இங்கு விக்கெட் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மண்ணின் மைந்தர்
முக்கியமாக சென்னையின் மண்ணின் மைந்தர்கள் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் இங்கு சிறப்பாக பவுலிங் செய்வார்கள், அதிக விக்கெட் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. நினைத்தபடி அஸ்வின் தொடக்கத்தில் நன்றாக பவுலிங் செய்து பர்ன்ஸ் விக்கெட்டை எடுத்தார்.

இங்கிலாந்து அணி
ஆனால் இங்கிலாந்து அணிக்காக தற்போது ஆடி வரும் ஜோ ரூட் ஸ்பின் பவுலிங்கில் கொஞ்சம் கூட கவலையின்றி அதிரடியாக ஆடினார். அதிலும் அஸ்வின், நதீம், சுந்தர் என்று மூன்று ஸ்பின் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டார். ஸ்பின் பவுலர்களை ஸ்வீப் ஷாட் அடித்தால் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

ரூட் பேட்டிங்
இதை முறையாக உணர்ந்து கொண்ட ரூட் அடுத்தடுத்து ஸ்வீப் ஷாட்களை அடித்தார். அஸ்வின், நதீம், சுந்தர் என்று எல்லோரின் பவுலிங்கிலும் பவுண்டரி அடித்தார். அதோடு நிறுத்தாமல் இன்னொரு பக்கம் ஸ்வீப் ஷாட்டை தடுக்கும் விதத்தில் கோலி பீல்டிங் நிறுத்தினார்.

செம ஷாட்
இதை உணர்ந்து கொண்ட ரூட் அப்படியே திரும்பி ஸ்விட்ச் ஹிட்களை அடிக்க தொடங்கினார். இதை கொஞ்சம் கூட கோலி எதிர்பார்க்கவில்லை. ஸ்பின் பவுலர்களை நம்பி கோலி களமிறங்கிய நிலையில் கோலியின் ஸ்பின் அஸ்திரத்தையே ரூட் காலி செய்தார்.

அதிரடி ஆட்டம்
மிகவும் அதிரடியாக ஆடிய ஜோ ரூட் வெறும் 164 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டி முழுக்க ரூட் கொஞ்சம் கூட திணறவில்லை. இந்த டெஸ்ட் போட்டியில் ரூட் கண்டிப்பாக மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications