333 மேஜிக் நம்பரை கொண்டு வந்த ரூட்.. 29 ரன்னிற்கு 5 விக்கெட்.. இந்தியா ஒடுங்கியது எப்படி? - பின்னணி
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் மிக மோசமாக பேட்டிங் செய்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து இந்தியா திணறி வருகிறது. பண்ட், சுந்தர், அக்சர் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்துள்ளனர்.
8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 125 ரன்கள் எடுத்துள்ளது. இன்று பிற்பகல் வலுவாக ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தற்போது கடுமையாக திணறிக்கொண்டு இருக்கிறது.

பேட்டிங்
இன்று பேட்டிங் இறங்கிய போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்து வலுவாக இருந்தது. ரோஹித் சர்மாவும் 57 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார். ஆனால் இந்திய அணி இன்று பேட்டிங் இறங்கியதில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஸ்பின்
பிட்ச் மொத்தமாக ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாறியுள்ளது. இதனால் தொடக்கத்தில் இருந்தே இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இதனால் தொடர்ந்து லீச், ரூட் மட்டும் மாற்றி மாற்றி பவுலிங் செய்தனர். தொடக்கத்திலேயே லீச் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார்.

எப்படி
இன்று ஆட்டம் தொடங்கிய பின் வரிசையாக இந்திய வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். ரஹானே ஒரு ரன்னுக்கும், அக்சர், பண்ட், சுந்தர் ஆகியோர் டக் அவுட்டும் ஆனார்கள். அஸ்வினும் 17 ரன்களுக்கு அவுட் ஆனார். வெறும் 29 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டை இழந்தது.

ரூட்
தொடக்கத்தில் வேறு 3 ஓவர்கள் வீசிய ரூட் 3 மெய்டன் ஓவர்களை வீசி அதில் 3 விக்கெட் எடுத்தார். பின் அஸ்வினின் விக்கெட்டையும் அவர்தான் வீழ்த்தினார். ரூட் சுழலில் வரிசையாக இந்திய வீரர்கள் அவுட்டானார்கள். இந்திய அணி உருவாக்கிய பிட்ச் இந்திய அணிக்கே எதிராக திரும்பி உள்ளது.


Click it and Unblock the Notifications