பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 2வது இடம்!சச்சினின் அதிக டெஸ்ட் ரன் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்-விவரம்
மான்செஸ்டர்: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 150 ரன்கள் விளாசி மாபெரும் சாதனையை படைத்திருக்கின்றார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 38வது சதத்தை பூர்த்தி செய்துள்ள ஜோ ரூட் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்த போட்டிக்கு முன்பு ஐந்தாவது இடத்தில் இருந்தார்.
தற்போது 150 ரன்கள் குவித்ததன் மூலம் ராகுல் டிராவிட், காலிஸ், ரிக்கி பாண்டிங் ஆகியோரை பின்னுக்கு தள்ளி தற்போது இரண்டாம் இடத்தை பிடித்திருக்கின்றார். இதன் மூலம் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு பிறகு ஜோ ரூட் மட்டும் தான் தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கின்றார்.

ஜோ ரூட் 157 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 13409 ரன்கள் அடித்திருக்கின்றார். வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வந்தால் ஜோ ரூட்டுக்கு 35 வயது நிறைவு செய்துவிடுவார். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் 15921 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கின்றார். சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 329 இன்னிங்ஸில் இந்த ரெக்கார்டை படைத்தார்.
ஜோ ரூட் 157 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 286 இன்னிங்ஸில் 13409 அடித்து இருக்கின்றார். தற்போது சச்சினை விட சரியாக 2512 ரன்கள் குறைவாக ஜோ ரூட் உள்ளார். இங்கிலாந்த அணி சராசரியாக ஒரு ஆண்டுக்கு 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஜோ ரூட் அதிகபட்சமாக 38 வயது வரை விளையாடி மேலும் ஒரு 30 டெஸ்ட் போட்டியில் விளையாடினால் நிச்சயமாக சச்சினின் இந்த சாதனையை முறியடிக்க முடியும்.
ஒரு வேளை ஜோ ரூட்டால் 37 வயது வரை தான் விளையாட முடியும் என்ற நிலை வந்தால் அவரால் அதிகபட்சமாக 15,000 ரன்கள் தாண்ட முடியும். இதனால் சச்சினின் சாதனையை அவர் முறியடிக்க வேண்டும் என்றால் வருடத்திற்கு ஆயிரம் ரன்கள் என இன்னும் இரண்டரை ஆண்டுகள் அவர் விளையாட வேண்டும்.
இல்லை வருடத்திற்கு 800 ரன்கள் அடிப்பதாக இருந்தால் ஜோ ரூக்ஷ் இன்னும் மூன்று ஆண்டுகள் 38 வயது வரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இல்லை ஜோர் ரூட்டால் இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் விளையாட முடியும் என்றால் அவருக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரன்கள் மேல் எடுக்க வேண்டும். இல்லை என்றால் சச்சின் சாதனை பாதுகாக்கப்படும்.


Click it and Unblock the Notifications