For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் பால்... முதல் முக்கிய விக்கெட்... பிஹு டான்ஸ் ஆடி கொண்டாடிய ஆர்ச்சர்

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் ஐபிஎல்லின் 30வது போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல் பந்திலேயே டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரரான பிரித்வி ஷாவின் விக்கெட்டை எடுத்து அசத்தினார் ஜோப்ரா ஆர்ச்சர்.

இதையடுத்து அசாமின் பாரம்பரிய நடனமான பிஹு நடனத்தை ஆடி மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ரியான் பராக் ஈடு கொடுத்தார்.

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

ஐபிஎல்லின் 30வது போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்றது. இதில் 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களும் போட்டியில் சிறப்பாகவே ஆடினர்.

அவுட்டாக்கிய ஆர்ச்சர்

அவுட்டாக்கிய ஆர்ச்சர்

முதல் பந்திலேயே டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரரான பிரித்வி ஷாவை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார் ஜோப்ரா ஆர்ச்சர். இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் அடுத்துவந்த வீரர்கள் சமாளித்து ஆடினர்.

ஈடுகொடுத்த ரியான் பராக்

ஈடுகொடுத்த ரியான் பராக்

இதனிடையே, பிரித்வி ஷாவின் விக்கெட்டை வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர் அசாமின் பாரம்பரிய நடனமான பிஹு நடனத்தை ஆடி தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ரியான் பராக் நல்ல கம்பெனி கொடுத்தார். இருவரும் ஆடிய இந்த நடனத்தை டிவியில் மட்டுமே பார்க்க முடிந்தாலும், ரசிகர்களுக்கும் உற்சாகம் பற்றிக் கொண்டது.

ஆர்ச்சருக்கு கற்றுகொடுத்த பராக்

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி கொண்ட நிலையில், அதை கொண்டாடும்வகையில், அசாமை சேர்ந்த பராக், தன்னுடைய பாரம்பரிய நடனமான பிஹு நடனத்தை ஆடி கொண்டாடினார். அதை அவர் ஆர்ச்சருக்கும் கற்று கொடுத்த நிலையில், தற்போது ஆர்ச்சர் அந்த நடனத்தை ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 15, 2020, 12:27 [IST]
Other articles published on Oct 15, 2020
English summary
A first-ball duck – Archer and the teammates were ecstatic as was seen in the celebrations
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+