WATCH: ஸ்மித்தை காலி பண்ணினது பத்தாதுன்னு இது வேறயா..? ரவுண்டு கட்டும் ஆர்ச்சரின் அட்ராசிட்டி வீடியோ
லண்டன்: பந்தால் காலி பண்ணியது பத்தாது என்று பேட்டால் காலி செய்யும் வகையில் ஸ்மித் போன்று பேட் செய்து ஆர்ச்சர் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகள் முடிந்துள்ளது. முதல் டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா, 2வது டெஸ்டில் தடுமாறி, ஒரு வழியாக டிரா செய்தது. இவ்விரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
மழையால் அவுட் பீல்டு ஈரமாகி இருந்ததால் ஆட்டம் நிறுத்தப் பட்டது. முன்னதாக ஆஷஸ் 2வது டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித்தும், இளம் புயல் ஜோப்ரா ஆர்ச்சரும் அபாரமான ஒரு சவால் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் ஆர்ச்சர் வீசிய பவுன்சர், ஸ்மித் கழுத் பதம் பார்த்தது.

சுருண்டு விழுந்த ஸ்மித்
148 கிமீ வேகத்தில் வந்த பந்தால் அடி வாங்கிய அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். வலி தாங்க முடியாததால் ரிட்டையர்ஹட் முறையில் பெவிலியன் திரும்பினார். இது குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ், ஆர்ச்சரிடம் இருந்து இன்னும் பல பவுன்சர்களை ஆஸ்திரேலியா பார்க்க நேரிடும் என்றார்.

திட்டம் தெரியும்
அதற்கு பதிலடியாக பேசிய ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இங்கிலாந்தை வீழ்த்தும் திட்டம் எங்களுக்கு தெரியும். எல்லா பவுலர்களின் பந்து வீச்சிலும் பவுன்சர் ஒரு அங்கம். விக்கெட்டை தருமானால் அதனை செய்வோம் என்றார்.

பயிற்சியில் ஆர்ச்சர்
இதற்கிடையே, 3வது டெஸ்ட்டுக்கு முன்பாக, ஆர்ச்சர் செய்த ஒரு காரியம் வைரலாகி இருக்கிறது. வழக்கம் போல வலைப்பயிற்சியில் ஆர்ச்சர் ஈடுபட்டிருந்தார். பவுலிங்குக்கு பதிலாக அவர் பேட் செய்தது முதல் ஆச்சர்யம்.

ஸ்டைல் பேட்டிங்
அதோடு அவர் செய்த மற்றொரு செயல்தான் டாப்கிளாஸ். பேட்டிங்கில் தாம் அடி கொடுத்த அனுப்பிய ஸ்மித்தை நினைவூட்டினார் ஆர்ச்சர். அவரை போன்று ஸ்டைலாக மட்டையை கையில் பிடித்தபடி பயிற்சி எடுக்க தொடங்கினார்.
ஸ்மித்தாக மாறிய ஆர்ச்சர்
ஒரு கட்டத்தில் வெளுப்பாக இருந்த ஸ்மித், கருப்பாக மாறி பேட் செய்கிறாரோ என்று எண்ண தோன்றுமளவுக்கு இருந்தது அவரது பேட்டிங். அதாவது, பந்தை தொடாமல் (வெல் லெவ்ட் என்று கிரிக்கெட் பாஷையில் சொல்வார்கள்) அங்கிட்டும், இங்கிட்டும் என்று நகர்ந்து, ஸ்மித் பல தடவை களத்தில் சேட்டையை காண்பித்தார்.

வைரல் வீடியோ
அதே போன்று தான் ஆர்ச்சரும் பயிற்சியில் செய்தார். அதை போல என்று சொல்வதை விட அதை தான் செய்தார் ஆர்ச்சர் என்று சொல்லலாம். ஆர்ச்சரின் இந்த பேட்டிங் ஸ்டைல் வீடியோ தான் இப்போதைக்கு இணையத்தில் வைரல்.


Click it and Unblock the Notifications