For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அய்யா.. சாமி..! சத்தியமா நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல..! ஒரு பந்தால் பதறி உருகும் இளம் வீரர்

Recommended Video

Smith floored by Archer| ஸ்மித் காயத்தால் ஏற்பட்ட சர்ச்சை... பதறிய ஆர்ச்சர்

லண்டன்: ஸ்மித் கீழே விழுந்த போது இதயமே நொறுங்கிவிட்டது, அவர் திரும்ப எழுந்த பின்னர் தான் உயிரே வந்தது என்று இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் சத்தியம் செய்யாத குறையாக பேசியிருக்கிறார்.

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு ஆடிய ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சை விளையாடியது.

ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்து வந்தாலும் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நின்று சிறப்பாக ஆடினார். கடைசி வரை போராடிய ஸ்மித் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தடுமாறிய ஸ்மித்

தடுமாறிய ஸ்மித்

இந்த போட்டியில் ஸ்மித் 70 ரன் எடுத்திருந்தபோது ஆர்ச்சர் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். அப்போது அசுரவேகத்தில் ஆர்ச்சர் வீசிய பந்து 148 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஸ்மித்தின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது.

ஆர்ச்சரின் செயல்

ஆர்ச்சரின் செயல்

அவர் அந்த பந்து பட்டதும் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அனைவரும் பதறியடிக்க, அதன்பின்னர் அடிபட்ட ஸ்மித்தை ஆர்ச்சர் அருகில் சென்று கூட பார்க்கவில்லை. ஆர்ச்சரின் இந்த செயலை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

தன்னிலை விளக்கம்

தன்னிலை விளக்கம்

ரசிகர்களும் ஆர்ச்சரை வசைபாடினர். மனிதநேயமற்றவர், இரக்கமில்லாதவர் என்று திட்டி தீர்த்தனர். விமர்சனங்கள் கடுமையான காரணத்தால், ஒரு கட்டத்தில் ஆர்ச்சர் தன்னிலை விளக்கம் நிலைக்கு தள்ளப்பட்டார்.

உயிர் அப்பதான் வந்தது

இது குறித்து ஆர்ச்சர் கூறி இருப்பதாவது: ஸ்டீவ் ஸ்மித் கீழே விழுந்ததை அந்த தருணத்தில் எங்களின் இதயமே நொறுங்கி விட்டது. அவர் திரும்ப எழுந்த பின்னர் தான் எங்களுக்கு உயிரே வந்தது. யாரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்ல வேண்டும் என்று எந்த தருணத்திலும் யாருமே நினைக்கமாட்டார்கள் என்று உருக்கமாக கூறினார்.

Story first published: Monday, August 19, 2019, 13:03 [IST]
Other articles published on Aug 19, 2019
English summary
Jofra archer explains about the incidents happened when smith injured by his ball.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+