Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

44 ரன்களுக்கு அவுட்டான துவக்க வீரர்கள்... அதிர்ச்சி கொடுத்த ரோகித், கில்... இந்தியா திணறல் துவக்கம்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 578 ரன்களை எடுத்துள்ளது.

இதையடுத்து தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. நிலையான ஆட்டத்தை தரவேண்டிய இந்திய துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்சில் 578 ரன்களை குவித்துள்ளது. அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதத்தை அடித்துள்ளார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

மூன்றாவது நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் 555 ரன்களை தாண்டி விளையாடிய இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 578 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை இந்தியா துவங்கியுள்ளது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இந்திய துவக்க வீரர்கள் அவுட்

இந்திய துவக்க வீரர்கள் அவுட்

ரோகித் சர்மா 6 ரன்களை எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில்லும் 29 ரன்களை எடுத்த நிலையில் அவுட்டானார். இவர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் 44 ரன்களில் சுருட்டினார் இங்கிலாந்து பௌலர் ஜோப்ரா ஆர்ச்சர்.

ஆன்டர்சன் சிறப்பு

ஆன்டர்சன் சிறப்பு

சுப்மன் கில் விக்கெட்டை 38 வயதான ஜேம்ஸ் ஆன்டர்சன் சிறப்பான முறையில் கேட்ச் பிடித்தார். தற்போது புஜாராவும் விராட் கோலியும் ஆடி வருகின்றனர். முதல் இன்னிங்சிலேயே 578 என்ற இமாலய இலக்கை கொண்டு களமிறங்கியுள்ள இந்திய அணியின் துவக்க வீரர்கள் சொதப்பியுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, February 7, 2021, 22:36 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+