ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் படுமோசமாக பந்துவீசி ஐபிஎல் வரலாற்றிலேயே மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.
உலகின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் ஜோப்ரா ஆர்ச்சர். இங்கிலாந்து அணியை சேர்ந்த அவர் 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். அந்த அணியின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் களம் இறங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியின் உச்சத்தை தொட்டது. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை தாண்டித்தான் ரன் குவித்தார்கள். இந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 76 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஜோப்ரா ஆர்ச்சரின் பவுலிங்கை வெளுத்து வாங்கினர். அதனால், அவர் அதிக ரன்களை வாரி இறைத்து 76 ரன்களை கொடுத்தார்.
இதுவே ஐபிஎல் வரலாற்றின் மிக மோசமான பந்துவீச்சு ஆகும். 2024 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருந்தது மோசமான பந்துவீச்சாக இருந்தது.
அந்த படுமோசமான சாதனையை முறியடித்து இருக்கிறார் ஆர்ச்சர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா 4 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து 287 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டும் எடுத்தது. அந்த அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியின் தோல்விக்கு ஜோப்ரா ஆர்ச்சரும் முக்கிய காரணமாக அமைந்தார்.
செய்தி சுருக்கம்: