
எப்படி
இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட போவது இல்லை என்று கூறப்படுகிறது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராக ஆர்ச்சர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். இந்திய அணியின் டாப் ஆர்டரை காலி செய்தது ஆர்ச்சர்தான்.

இரண்டாவது இன்னிங்ஸ்
இரண்டாவது இன்னிங்சில் ஆர்ச்சர் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. சென்னையின் பிட்ச் சரியாக இல்லை. இப்படி ஒரு மோசமான பிட்சை பார்த்தது இல்லை என்றும் ஆர்ச்சர் குறிப்பிட்டு இருந்தார். சென்னை பிட்ச் முதல் நான்கு நாட்கள் கொஞ்சம் கூட ஸ்விங் ஆகவில்லை.

ஸ்விங்
இதன் காரணமாக விக்கெட் எடுக்க முடியாமல் ஆர்ச்சர் திணறினார். இந்த நிலையில் சென்னை வெயிலில் பவுலிங்கும் போட முடியாமல் ஆர்ச்சர் தள்ளாடி போனார். வெயிலில் ஓடி ஓடி, ஆர்ச்சர் பெரிய அளவில் கஷ்டப்பட்டார். இதில் அவருக்கு காயமும் ஏற்பட்டது.

தொடை
ஆர்ச்சரின் தொடை மற்றும் கையில் லேசான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இரண்டாவது டெஸ்ட்டில் ஆர்ச்சர் ஆட மாட்டார் என்று உறுதியாகி உள்ளது. இங்கிலாந்து இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட்டில் ஆர்ச்சருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படி
இதனால் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு எதிராக ஆண்டர்சன் மற்றும் போர்ட் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ச்சர் இல்லாத நிலையில் ஆண்டர்சன் மீண்டும் அணிக்குள் வருவார். அதேபோல் ஸ்டூவர்ட் போர்டு மீண்டும் அணியில் இணைவார்.


Click it and Unblock the Notifications