Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வு பெறுகிறார் ஜான் ஹாஸ்டிங்ஸ்... ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ். நல்ல பார்மில் இருக்கும் இவர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவரது இந்த திடீர் முடிவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் சில விளையாட்டு வீரர்கள் முழு உடல் தகுதியோடு இருக்கும் போதே தனது போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவர். சிலர் எதிர்பாராமல் ஏற்பட்ட காயம் காரணமாக கனத்த இதயத்துடன் விளாயாட்டுப் போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவர். எதிர்பாராத காயம் காரணமாக ஓய்வு பெறுபவர்களின் முடிவு எப்போதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

John hastings announced his retirement... loss for australian cricket !

அந்த வகையில் இப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜான் ஹாஸ்டிங்ஸ் எடுத்திருக்கும் முடிவும் பெரும் கலக்கத்தினை அணியினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வேகப்பந்து விசுவதில் நல்ல திறமை கொண்ட இவர் தொடர் ஆபரேஷன்கள் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெரும் முடிவை அறிவித்துள்ளார்.

இவருக்கு கைகளிலும், கால்களிலும் இதுவரை 8 ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. கைகளில் மட்டும் 4 இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவரது உடலில் செய்யப்பட்ட தொடர் ஆப்ரேஷன்களால் தற்போது சரியா போட்டிகளில் விளையாட முடியாமல் சிரமம்படுகிறார். இந்தப் பிரச்சனை காரணமாக நல்ல பார்மில் இருந்தாலும் இவரால் சரியா பர்பாம் செய்ய முடிவதில்லை.

இதையடுத்து டி- டுவென்டி போட்டிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து மொத்தமாக ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். நல்ல விக்கெட் ஆவரேஜ் வைத்திருக்கும் இந்த இளம் பவுலரின் இழப்பு ஆஸ்திரேலிய அணிக்கு ஈடு செய்ய முடியாதது ஆகும்.

Story first published: Saturday, October 7, 2017, 12:25 [IST]
Other articles published on Oct 7, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+