For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

77 பந்துகளில் சதம்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து சாதனை.. ஒருநாள் போட்டியை மிஞ்சிய செஸிங்

நாட்டிங்காம்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்யில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recommended Video

England-ன் Series Win! Trent Bridge-ல் Bairstow வெறித்தனம் | Aanee's Appeal | ENG vs NZ |*Cricket

இதில் இங்கிலாந்து வீரர் பாரிஸ்டோ 77 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியையே மிஞ்சும் அளவுக்கு செஸிங் இருந்தது.

இதன் மூலம் தொடரையும் இங்கிலாந்து அணி வென்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

553 ரன்கள்

553 ரன்கள்

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 169 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து தடுமாறிய நிலையில், டேரல் மிட்செல், டாம் பிளான்டன் ஆகியோர் அடுத்தடுத்து சதம் விளாசினர். இதில் டேரல் மிட்செல் 10 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்கள் எடுத்தது.

ஜோ ரூட் சதம்

ஜோ ரூட் சதம்

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இதில் ஜோ ரூட் 176 ரன்கள் மற்றும் போப் 145 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து அணி 539 ரன்களை விளாசியது. இதனையடுத்து 14 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 284 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஆண்டர்சன 2 விக்கெட்டுகளையும், பிராடு 3 சிக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

299 ரன்கள் இலக்கு

299 ரன்கள் இலக்கு

இதனையடுத்து கடைசி நாள் ஆட்டத்தில் 70 ஓவர்கள் கைவசம் இருக்க, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 299 ரன்கள் தேவைப்பட்டது. போட்டி டிராவை நோக்கி செல்லும் என எதிர்பார்த்த நிலையில், இங்கிலாந்து அணி 93 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ், பாரிஸ்டோ நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர்.

பாரிஸ்டோ அதிரடி சதம்

பாரிஸ்டோ அதிரடி சதம்

ஸ்டோக்ஸ் 75 ரன்களில் ஆட்டமிழக்காமல் நிற்க, சிறப்பாக விளையாடிய பாரிஸ்டோ 77 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடியை காட்டிய பாரிஸ்டோ, 7 சிக்சர்கள், 14 பவுண்டரிகளை அடித்து 92 பந்துகளில் 136 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர் முடிவில் 299 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, June 15, 2022, 17:32 [IST]
Other articles published on Jun 15, 2022
English summary
Johnny Baristow 77 ball century helps England beat NZ by 5 wickets77 பந்துகளில் சதம்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து சாதனை.. ஒருநாள் போட்டியை மிஞ்சிய செஸிங்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+