Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாரிஸ்டோ விராட் கோலி இடையே மோதல்.. கெட்ட வார்த்தையில் திட்டிய கோலி.. எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பரபரப்பு

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Recommended Video

Jonny Bairstow - Virat Kohli இடையே மோதல்... மைதானத்தில் பரபரப்பு

முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 41 ஓவர் முடிவில் 177 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

வழக்கம் போல் பாரிஸ்டோ மட்டும் போராடி அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

கோலி Vs பாரிஸ்டோ

கோலி Vs பாரிஸ்டோ

இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலிக்கும், பாரிஸ்டோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முகமது ஷமி ஓவர் வீசிய போது பாரிஸ்டோ, அவரிடம் ஏதோ சொல்ல, நமது விராட் கோலி கோதாவில் இறங்கினார். பாரிஸ்டோவுக்கு பந்தை தவிர மற்றது எல்லாம் தெரியும் என்று விராட் கோலி கூற, அதற்கு பாரிஸ்டோ கடுப்பாகி உங்கள் வேலை நீங்கள் பாருங்கள் கோலி என்று கூறினார்.

கோலி எச்சரிக்கை

கோலி எச்சரிக்கை

அதற்கு என் வேலையை நான் பார்க்கிறேன், பேட்டிங் செய்வது மட்டும் தான் உன் வேலை நீ அதை செய் என்று கூறினார். இதற்கு மீண்டும் பாரிஸ்டோ எதிர்ப்பு தெரிவிக்க, விராட் கோலி மீண்டும் சில வார்த்தைகளை கூறி திட்டினார். இதனையடுத்து நிலைமை கொஞ்சம் கையை மீற, நடுவர்கள் உடனடியாக வந்து இரு வீரர்களையும் சமாதானப்படுத்தினர்.

பழைய கோலி

பழைய கோலி

இதனால் சில நேரம் மைதானத்தில் பரபரப்பு நிலவியது. விராட் கோலி கேப்டனாக இருக்கும் போது, இது போன்ற எதிரணி வீரர்களிடம் ஆக்ரோஷமாக பேசி சாதாரணமாக நடக்கும் டெஸ்ட் போட்டியில் பரபரப்பை கிளப்புவார். தற்போது கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த விராட் கோலி தற்போது மீண்டும் சண்டியராக மாறிவிட்டார்.

ஐபிஎல் நண்பர்கள்

நேற்று இதே விராட் கோலியும், பாரிஸ்டோவும் பெவிலியன் நோக்கி சென்ற போது தோள் மீது கையை போட்டு சிரித்து கொண்டு பேசினர். அப்போது இரு ஐபிஎல் நண்பர்களும் பேசி கொண்டு சிரிப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூற, தற்போது மறு நாள் காலை இருவரும் மோதி கொண்டது, ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.

Story first published: Sunday, July 3, 2022, 17:15 [IST]
Other articles published on Jul 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+