போய்ட்டு வர்றேன் பை பை.. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மிச்சல் ஜான்சன்
பெர்த் : ஆஸ்திரேலியா அணியின் வேகபந்துவீச்சாளர் மிச்சல் ஜான்சன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் சர்வதேச போட்டிகளில் ஒருந்து 2015ஆம் ஆண்டே ஓய்வு பெற்ற போதிலும் பல்வேறு கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். தற்போது அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஜான்சன் 2018 ஆம் ஆண்டு ஐபில் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் முதுகு வலியால் அவதிப்பட்டார்.
இந்நிலையில் பெர்த்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எல்லாம் முடிந்துவிட்டது. நான் எனது கடைசி பந்தை வீசிவிட்டேன்,எனது கடைசி விக்கெட்டையும் எடுத்து விட்டேன்.அதனால் எனது ஓய்வு முடிவை இன்று அறிவிக்கின்றேன். அடுத்த ஆண்டு முதல் பாதி வரை பல்வேறு கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்திருந்தேன்.
ஆனால் என்னுடைய உடல் 100% ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் என்னால் அணிக்கு முழுமையான பங்களிப்பை அளிக்க முடியாது. எதிர்காலத்தில் எனது கிரிக்கெட் திறமையை கொண்டு பயிற்சியாளராக எனது பங்களிப்பை அளிப்பேன் என்றும் கூறினார்.
36 வயதான ஜான்சன் ஒரு காலத்தில் பந்துவீச்சில் எதிரணியை மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
Story first published: Monday, August 20, 2018, 14:15 [IST]
Other articles published on Aug 20, 2018


Click it and Unblock the Notifications