Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிவிட்டரில் ஜடேஜாவுக்கு செம "தர்ம அடி"!

மிர்பூர்: இந்தியா, வங்கதேசம் இடையிலான 3வது ஒரு நாள் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படாதது குறித்து டிவிட்டரில் கிண்டல்கள், கேலிகள், வெடிச் சிரிப்புகள், நக்கல்கள், நையாண்டிககள் தலை விரித்தாடுகின்றன.

ஜடேஜாவை நீக்கியதை பலரும் வரவேற்று கமெண்ட் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜடேஜாவால்தான் கோஹ்லிக்கும், டோணிக்கும் சண்டை ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து கோஹ்லி ஆதரவாளர்கள் ஜடேஜாவை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்று கோட் செய்து கிண்டலடிக்கும் அளவுக்கு ஜடேஜா நீக்கம் டிவிட்டரில் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

சுத்தமாக பார்ம் இல்லை

சுத்தமாக பார்ம் இல்லை

ஜடேஜாவிடம் சுத்தமாக பார்ம் இல்லை. உலகக் கோப்பைக் கிரிக்கெட்டிலும் கூட அவர் பெரிதாக சாதிக்கவில்லை. சோபிக்கவில்லை. இந்தத் தொடரிலும் அவர் சரிவர ஆடவில்லை. ஐபிஎல் போட்டியிலும் கூட அவர் சொதப்பினார்.

விடாமல் சான்ஸ்

விடாமல் சான்ஸ்

இருப்பினும் விட்ட குறை தொட்ட குறை என்பது போல ஜடேஜாவுக்கு டோணி தொடர்ந்து வாய்ப்பளித்தார். அதை வைத்தாவது அவர் சுதாரிப்பார் என்ற நம்பிக்கையில். ஆனால் அதை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு அவர் பாட்டுக்கு சிவனே என்று ஆடி வந்தார் ஜடேஜா.

வங்கதேச டூரால் வந்தது வினை

வங்கதேச டூரால் வந்தது வினை

இப்போது வங்கதேச டூரிலும் ஜடேஜா சரியாக ஆடவில்லை. ஆனாலும் தொடர்ந்து அணியில் இடம் பெற்றார் ஜடேஜா. இதுதான் பிரச்சினையைக் கிளப்பி விட்டு விட்டது. இதையடுத்து இன்றைய 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார்.

டிவிட்டரில் நக்கல்

டிவிட்டரில் நக்கல்

ஜடேஜா நீக்கப்பட்டதை டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள் பலர். விதம் விதமாக கிண்டலடித்து கலாய்த்து வருகிறார்கள்.

போலி சர்ட்டிபிகேட் சிக்கிருச்சே

கேகே பெஹனோ என்பவர் விடுத்துள்ள டிவிட்டில், ரவீந்திர ஜடேஜா கடைசியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் போலி "சர்"டிபிகேட் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். ஜடேஜாவை செல்லமாக சர் என்று அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகேஷ்

ரிப்லி நம்பினால் நம்புங்கள் என்று கூறி கிண்டலடித்துள்ளார் யோகேஷ் என்பவர்.

ரோபில்இன்டியன் 2.0

இவர் கூறியுள்ள கருத்து இது - ஜடேஜாவை தூக்குவது என்பது நல்ல முடியவுதான். ஆனால் அவரை நல்ல உயரத்திலிருந்து கீழே தூக்கி் போட வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

ஆர்ஜேடிப்

இஷாந்த் சர்மாவும் இல்லை. ஜடேஜாவும் இல்லை. இன்றைய தோல்விக்கு வேற யாரைக் காரணமாக்குவது.. ஆளே இல்லையே!

புனீத் பார்ஜாத்யா

இவர் போட்டுள்ள குறும்பு டிவிட் - ஜடேஜா நீக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் எனது உணர்வு இது... என்று கூறி ஒரு டான்ஸ் வீடியோவைப் போட்டுள்ளார்.

காட் பார்ட்டிகிள்

இவர் ஒரு படத்தைப் போட்டு வேற வேலையைத் தேட வேண்டியதுதான் ஜடேஜா என்று கிண்டலடித்துள்ளார்.

இப்படி ஜடேஜாவுக்கு ஆளாளுக்கு "தர்ம அடி" கொடுத்துள்ளனர் டிவிட்டரில்

Story first published: Wednesday, June 24, 2015, 17:29 [IST]
Other articles published on Jun 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+