தோனி அணிக்கு எதிரான மேட்ச் தான் லாஸ்ட்.. அப்புறம் டாட்டா... பை பை சொல்லும் அதிரடி வீரர்
மும்பை: கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான போட்டியுடன் சன் ரைசர்ஸ் அணி பேர்ஸ்டோ இங்கிலாந்து திரும்ப உள்ளார்.
ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப்புக்கு தகுதி பெறுவது உறுதியாகிவிட்டது. எஞ்சிய 2 இடங்களை பிடிக்க கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, ஹைதராபாத் ஆகிய 4 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த சீசனில் இறுதி போட்டி வரை சென்ற சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் வார்னர் திரும்பியிருப்பது கூடுதல் பலம் பெற்றுள்ளது. மேலும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை சன் ரைசர்ஸ் எடுத்தது. அவரும், அபாரமாக ஆடினார்.

8 ஆட்டங்கள்
அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடி 4ல் வெற்றியுடன் 8 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது. அந்த அணி அடித்த ரன்களில் 70 சதவிகிதம் ரன்கள் வார்னரும் பேர்ஸ்டோவும் சேர்த்ததுதான்.

நாடு திரும்பும் பேர்ஸ்டோ
இந்நிலையில், இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் ஒரு ஒருநாள் போட்டியிலும் அதன் பின்னர் உலக கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆடுகிறது. அதனால் வரும் 23ம் தேதியுடன் பேர்ஸ்டோ தாய்நாடு திரும்புகிறார்.

365 ரன்கள் குவிப்பு
சன் ரைசர்ஸ் அணிக்காக இதுவரை 8 போட்டிகளில் ஆடிய பேர்ஸ்டோ, ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 365 ரன்களை குவித்துள்ளார். பேர்ஸ்டோவின் இழப்பு சன்ரைசர்ஸ் அணிக்கு இழப்பு.

வாய்ப்பு கிடைக்கும்
நியூசிலாந்து அதிரடி வீரர் மார்டின் குப்தில் அணியில் உள்ளார். பேர்ஸ்டோ சிறப்பாக ஆடியதால் குப்திலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், பேர்ஸ்டோவின் இழப்பை அவர் ஈடுகட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications