Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதைத் தான் எதிர்பார்த்தோம்.. இந்திய அணியில் ஜாண்டி ரோட்ஸ்.. இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகும் பிசிசிஐ!

Recommended Video

Jonty rhodes Indian Coach : இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கும் ஜாண்டி ரோட்ஸ்

மும்பை : இந்திய அணியில் பயிற்சியாளர்கள் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ஒரு பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் என அனைத்து வகை பயிற்சியாளர்கள் பதவிக்கும் தேர்வு நடைபெற்று வருகிறது.

பயிற்சியாளர் தேர்வு

பயிற்சியாளர் தேர்வு

தற்போது பணியில் இருக்கும் பயிற்சியாளர்கள் அனைவரும் நேரடியாக விண்ணப்பம் அளித்தவர்களாக கருதப்பட்டு பயிற்சியாளர் பதவிகளுக்கு கருத்தில் கொள்ளப்படுவார்கள். புதிதாக விண்ணப்பம் அளிப்பவர்களோடு இவர்களும் போட்டி போட்டுத் தான் அவர்கள் தங்கள் இடத்தை திரும்பப் பெற முடியும்.

ஸ்ரீதர் தான் வருவார்

ஸ்ரீதர் தான் வருவார்

இந்த நிலையில், தற்போது பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஸ்ரீதர், இந்திய அணியின் பீல்டிங்கை பல மடங்கு முன்னேற்றி இருக்கிறார் என்பதால் அவருக்கு தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது. மேலும், ஒருவர் கூட பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்காமல் இருந்தனர்.

ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பம்

ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பம்

இந்த நிலையில், ஜாண்டி ரோட்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, ஸ்ரீதர் அத்தனை எளிதாக தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியாது என பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.

பீல்டிங் மன்னன்

பீல்டிங் மன்னன்

ஜாண்டி ரோட்ஸ் உலகின் தலைசிறந்த பீல்டர் ஆவார். இன்று பீல்டிங்கில் ஏராளமான வீரர்கள் கலக்கி வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் காட்ஃபாதர் ஜாண்டி ரோட்ஸ் தான். இன்னும் அவரது பீல்டிங் தரத்தை எந்த வீரரும் எட்டவில்லை என்பதும் உண்மை.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

அதனால், ஜாண்டி ரோட்ஸ் இந்திய அணிக்கு பீல்டிங் பயிற்சி அளிக்க விருப்பம் தெரிவித்து இருக்கும் நிலையில், அதை தவறவிடுவது பின்னடைவாகக் கூட அமையலாம். முன்பு அவர் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2009 முதல் 2017 வரை பீல்டிங் பயிற்சி அளித்து வந்தார். அதே போல இலங்கை, பாகிஸ்தான் மற்றும் கென்யா போன்ற அணிகளுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.

இன்ப அதிர்ச்சி கொடுக்குமா பிசிசிஐ?

இன்ப அதிர்ச்சி கொடுக்குமா பிசிசிஐ?

ஜாண்டி ரோட்ஸ்-ஐ இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமித்து இன்ப அதிர்ச்சி கொடுக்குமா பிசிசிஐ என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கபில் தேவ் தலைமையிலான தேர்வுக் குழு கையில் தான் இந்த முடிவு உள்ளது.

Story first published: Wednesday, July 24, 2019, 12:57 [IST]
Other articles published on Jul 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+