Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெத்தியில என்ன? தமிழ்நாடு மேப் மாதிரி இருக்கு?.. ஹெய்டனை கலாய்க்கும் ஜான்டி ரோட்ஸ்

Recommended Video

காயம் ஏற்பட்டுள்ள ஹெய்டனை கலாய்க்கும் ஜான்டி ரோட்ஸ்- வீடியோ

சிட்னி : முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் கடுமையான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.

நேற்று ஹெய்டன் காயமடைந்து மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வைரலானது.

[கோலி, ரவி சாஸ்திரியை எதிர்த்து தேர்வுக் குழு பேச முடியாது.. ஓப்பனாக பேசும் கிர்மானி]

ஹெய்டன் இப்போது தேறி வருகிறார். இந்த நிலையில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், ஹெய்டனை கலாய்த்துள்ளார். ஹெய்டன் தலையில் உள்ள காயம் தமிழ்நாடு வரைபடம் போல இருப்பதாக கேலி செய்துள்ளார்.

ஹெய்டன் படுகாயம்

ஹெய்டன் படுகாயம்

ஹெய்டன் கடல் விளையாட்டான சர்ஃபிங்-கில் ஈடுபட்டு இருந்த போது பெரிய கடல் அலை அவரை கரையில் வேகமாக கொண்டு வந்து சேர்த்துள்ளது. அதனால், தடுமாறி கடற்கரையில் வேகமாக விழுந்த ஹெய்டன் கடும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். நேற்று அவர் அந்த காயங்களை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருந்தார்.

தமிழ்நாடு மேப்தானே அது?

தமிழ்நாடு மேப்தானே அது?

இந்த நிலையில், முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் சமூக வலைதளத்தில் வெளிட்ட பதிவில், "உங்க நெத்தியில இருக்குறது தமிழ்நாடு கடற்கரை மேப் தானே? உண்மையான அர்ப்பணிப்பு நண்பரே.. எங்களை போல லேசான ஆட்கள் எல்லாம் எளிதா பச்சை குத்திப்போம்" என கலாய்த்துள்ளார்.

வலுவான ஹெய்டன்

வலுவான ஹெய்டன்

ஹெய்டன் நெத்தியில் பலமான காயம் ஏற்பட்டு வெளியே அதன் வடு பெரிதாக தெரிகிறது. பார்க்க அது தமிழ்நாட்டின் வரைபடம் போல இருப்பதாக கூறிய ரோட்ஸ், கூடவே, அவர் அதை பச்சை குத்தத்தான் காயத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என செமயாக கலாய்த்துள்ளார். ஹெய்டன் மிகவும் வலுவான வீரர். அவர் உடல்வாகு மிகவும் பெரிதாக இருக்கும். அதை தான் சுட்டிக் காட்டியுள்ளார் ஜான்டி ரோட்ஸ்.

டிஎன்பிஎல் தமிழ்நாட்டு அறிமுகம்

டிஎன்பிஎல் தமிழ்நாட்டு அறிமுகம்

இவர்கள் இருவரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் தூதராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளனர். அப்போது தமிழ்நாட்டில் இருவரும் சுற்றி வந்துள்ளனர். அந்த ஞாபகங்களை வைத்து தான் இங்கே தமிழ்நாட்டை வைத்து கேலி செய்துள்ளார் ரோட்ஸ்.

Story first published: Tuesday, October 9, 2018, 14:04 [IST]
Other articles published on Oct 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+