ஜான்டி ரோட்ஸ் மகளின் பெயர் 'இந்தியா'
மும்பை: தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ்க்கு மும்பையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டியுள்ளார்.
தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக உள்ளார். இவரது மனைவி மெலின் ஜெனி நிறை மாத கர்ப்பமாக இருந்தார். இதனையடுத்து தனது மனைவியை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார்.
பெண் குழந்தை
நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மும்பை புறநகர் பகுதியான சான்டா க்ரூசில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று மதியம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.71 கிலோ எடை இருந்தது.

ஜான்டி ரோட்ஸ்க்கு வாழ்த்து
குழந்தை சுகப்பிரசவமாக பிறந்ததையடுத்து ஜான்டி ரோட்ஸ் மகிழ்ச்சியில் திளைத்தார். கிரிக்கெட் வீரர்களும், விஐபி.க்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தண்ணீருக்குள் பிரசவம்
இந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் சுகமாக பிறந்தது. தண்ணீருக்குள் வைத்து பிரசவிப்பதற்காக கடந்த 3 மாதங்களாக ஜான்டி ரோட்சின் மனைவி பயிற்சி பெற்று வந்தார். தண்ணீரில் குழந்தையை பெற்றெடுப்பது தாய்க்கு பிரசவ வலியை வெகுவாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளின் பெயர் இந்தியா
குழந்தை இந்தியாவில் பிறந்ததால் குழந்தைக்கு 'இந்தியா' ஜென்னி ஜான்டி ரோட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கு முன் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டியான் நாஷ் தனது குழந்தைக்கு இந்தியா லில்லி என்று பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications