யுவராஜ் சிங்கின் ஆறு சிக்ஸர்களுக்கு காரணம் லஸ்ஸிதான்.. உண்மையை கூறிய ஜான்டி ரோட்ஸ்!
டெல்லி: யுவராஜ் சிங்கின் ஆறு சிக்ஸர்களுக்கு காரணம் லஸ்ஸிதான் என்று ஜான்டி ரோட்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் காமெடியாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் அவர் லஸ்ஸி குடிக்கும் புகைப்படம் ஒன்றையும் இதனுடன் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழ் லஸ்ஸியின் அருமை பெருமைகளை பற்றி எழுதியுள்ளார்.
இந்த இரண்டு டிவிட்டிற்கும் யுவராஜ் சிங் பதில் அளித்துள்ளார். இவர்கள் டிவிட்டரில் காமெடியாக லஸ்ஸி குறித்து பேசிக்கொண்டது வைரல் ஆகி இருக்கிறது.

இந்தியா பற்றி ஜான்டி ரோட்ஸ்
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸ் இந்திய நாட்டின் மீது அதிக விருப்பம் கொண்டவர். இந்தியாவின் மீதான பிரியத்தால் தன்னுடைய மக்களுக்கு இந்தியா என்ற பெயர் வைத்தார். அப்போது அவர் இந்திய அணிக்கு எதிராக இங்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டு இருந்தார். இந்த சம்பவம் அப்போது கிரிக்கெட் உலகில் பெரிய அளவில் வைரல் ஆனது.
லஸ்ஸி பற்றி டிவிட்
தற்போது இந்தியாவில் இருக்கும் அவர் லஸ்ஸி குறித்து டிவிட் செய்துள்ளார். இவர் இந்தியாவிற்கு சுற்று பார்க்க வந்துள்ளார். போட்டோவுடன் டிவிட் செய்து இருக்கும் அவர் ''ஜெய்ப்பூரின் பிரபலமான லஸ்ஸி கடை. 1944ல் இருந்து சுவை மாறாமல் அதே தரத்துடன் செயல்படுகிறது'' என்று அந்த லஸ்ஸி கடை குறித்து எழுதியுள்ளார்.
சிக்ஸர் ரகசியம்
அந்த டிவிட்டோடு நிற்காமல் அவர் யுவராஜ் சிங்கையும் அதில் மென்ஷன் செய்து உள்ளார். அதில் ''இதுதான் யுவராஜ் சிங் சிக்ஸ் அடிப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு யுவராஜின் ரசிகர்கள் சந்தோசமாக பதில் செய்து வருகின்றனர்.
பீல்டிங் செய்வதன் ரகசியம்
தற்போது அந்த டிவிட்டிற்கு யுவராஜ் சிங் பதில் அளித்து இருக்கிறார். அதில் ''ஆமாம், அதேபோல் ஜான்டி ரோட்ஸின் சிறந்த கேட்சுகளுக்கான ரகசியமும் அதுதான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் பீல்டர்களில் இவர் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications