Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்கையில் முங்கியெழுந்து... அந்த பீலே தனிதாங்க... பரவசப்பட்ட முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்

ரிஷிகேஷ் : ரிஷிகேசத்தில் பாய்ந்துவரும் கங்கையில் புனித நீராடிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ், தான் நீராடிய புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கங்கையில் புனித நீராடுவது உடலுக்கு சிறப்பானது என்றும் ஆன்மிக வழியிலும் அது சிறந்தது என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Jonty Rhodes Takes A Dip In The Ganges In Rishikesh

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பீல்டிங் கோச்சாக இணைந்துள்ள ஜான்டி ரோட்ஸ், இந்தியாவுடனான தன்னுடைய தொடர்பை தொடர்ந்து பாதுகாத்து வருபவர். இவர் தன்னுடைய பெண் குழந்தைக்கு இந்தியா ஜீன் ரோட்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.

முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் எப்போதும் இந்தியா மீதும் அதன் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். ஐபிஎல் 2020 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பீல்டிங் கோச்சாக தற்போது புதிதாக இணைந்துள்ள ஜான்டி ரோட்ஸ், இந்திய கலாச்சாரத்தின்மீது கொண்ட பற்றின் காரணமாக கடந்த 2016ல் பிறந்த தன்னுடைய பெண் குழந்தைக்கு இந்தியா ஜீன் ரோட்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.

முன்னதாக ஒரு இன்டர்வியூவில் இந்தியா குறித்து பேசிய ரோட்ஸ், இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஆன்மிகம் தன்னை மிகவும் கவர்ந்து வருவதாகவும், தான் இந்தியாவில் அதிக நேரங்களை செலவிட்டு வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியா பரந்த சிந்தனைகளை கொண்ட மக்களை அதிகமாக கொண்ட நாடு என்றும் அவர் புகழாரம் சூட்டினார். ஆன்மிகம் மற்றும் பரந்த நோக்கம் இணைந்த இந்த சேர்க்கை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது துவங்கவுள்ள ஐபிஎல் 2020 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக பீல்டிங் கோச்சாக அவர் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த பொறுப்பை ஏற்றார். இந்த அணியில் அனில் கும்ப்ளே, மேற்கிந்திய தீவுகளின் கோர்ட்னே வால்ஸ், முன்னாள் இந்திய ஸ்பின்னர் சுனில் ஜோஷி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஆகியோருடன் இணைந்து அவர் அணியை வழிநடத்தவுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஜான்டி ரோட்ஸ், ரிஷிகேசத்தில் பாய்ந்துவரும் கங்கையில் புனித நீராடினார். குளிர்ந்த இந்த நீரில் குளித்தது உடலுக்கு நன்மை அளிப்பதாக கூறிய அவர், ஆன்மிக வழியிலும் அது சிறப்பானது என்று மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் இந்த புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

தற்போதைய சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக பீல்டிங் கோச்சாக செயல்பட்டுவரும் ஜான்டி ரோட்ஸ் முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2009 முதல் 2017 வரை பீல்டிங் கோச்சாக செயல்பட்டு, அந்த அணி 3 டைட்டில்களை வெல்ல காரணமாக இருந்தவர். இந்நிலையில் கே.எல். ராகுல் தலைமையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோதவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக பீல்டிங் கோச்சாக செயல்பட உள்ளார் ஜான்டி ரோட்ஸ். இந்த அணி இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 5, 2020, 11:44 [IST]
Other articles published on Mar 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+